Thursday, August 4, 2011
நடுத்தர வயது மாற்றத்திற்கு இதயத்துடன் மூளையும் பாதிப்படைகிறது
புகைத்தல், நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்றவையும் பத்து வருடங்களின் பின்னர் மூளையின் சக்தியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என கணடறியப்பட்டுள்ளது.
அதிகளவு நினைவாற்றல் கொண்ட நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது இந்தத் தகவலையும் வைத்தியர்கள் மனதிற்கொண்டு அவர்களது வாழ்க்கைமுறையை முன்னேற்றத் தூண்டவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
50 வயதுள்ளவர்கள் மனரீதியான பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் குறைவான நினைவாற்றலுடனேயே இருந்தார்கள்.
50 வயது மற்றும் 60 வயதைச் சேர்ந்த 1300 ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கி அவர்களது நிறையையும் உயரத்தையும் அளந்து, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவுப் பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கியது அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று.
அடுத்த 10 வருடங்களுக்கான மூளை அளவினை அளப்பதற்கான ஸ்கான்களும் மனநிலைப் பரிசோதனைகளும் இவர்களில் மேற்கொள்ளப்பட்டன.
வயது அதிகரிக்க திடமானவர்களது மூளைகூடச் சுருங்குகின்றது என அந்த ஆய்வின் முடிவு கூறியது.
ஆனால் நீரிழிவுடனான நபர்களில் குறைந்த நினைவாற்றல், மூளையின் நினைவுத்தட்டுச் சுருங்குதல் என்பன சாதாரணமானவர்களை விட அதிகமாக ஏற்படுகின்றது என்பதைக் கண்டனர்.
குறைந்த நினைவாற்றலானது புகைபிடிப்பவர்களில் அதிகமாக உள்ளது. அத்துடன் உயர்குருதியழுத்தத்துடன் உள்ளவர்களில் மூளையில் சிறிய வெடிப்புக்கள் அல்லது சேதங்கள் காணப்படுகின்றன.
காலம் முடிந்துவிடும் முன்னர் தமது வாழ்க்கை முறையை மாற்றிவிடக்கூடியதாக இக்கண்டுபிடிப்புக்கள் உள்ளனவென சாள்ஸ் டீகார்லி என்ற விஞ்ஞானி கூறுகின்றார்.
இதற்கு முன்னர், அமெரிக்க ஓய்வூதியம் பெறும் வயோதிபர்களிடையே நடாத்தப்பட்ட ஓர் ஆய்வில், உடற்பருமனானது 16 வருடங்களை மூளையில் அதிகரிக்கச் செய்கின்றதெனக் கண்டறிந்தனர். உயரளவில் கொழுப்பு அதிகரிப்பதும் நாடிகளை உறையச் செய்வதுடன் இரத்தத்தினையும் ஒட்சிசனையும் பாயவிடாமற் செய்துவிடும்.
உடற்பயிற்சிகளைச் செய்து, சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு, புகைக்காமல் வாழ்க்கை முறையை மாற்றுவது அரைவாசிப் பேரது ஆயுளையும் நீட்டிக்குமெனக் கூறப்படுகின்றது.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் நிறை கூடியவர்கள் 75 வயதில் உள்ளவர்களைவிட இரு மடங்கு நினைவாற்றல் குறைவானவர்களாக இருப்பார்கள்.