இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய செயல்பாடுகள் இல்லை என்பதை சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் ஓப்புக்கொள்கிறார்கள்.
முன்னைய ஆட்சியுடன் ஓப்பிடுகையில் தற்போதைய ஆட்சியில் ஒருவித தேக்கநிலை தென்படுவதாக பொதுமக்களிடம் பேச்சு அடிபடுகிறது..
பொதுமக்களிடையே காணப்படும் இத்தகைய கருத்து பற்றிதொடர்பாக பிபிசி தமிழோசை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டது.
பொதுவாக விமர்சனங்கள் உள்ளதை ஆளும் தரப்பை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஒப்புக்கொண்டார்.
மாகாணசபை அரசின் மூலமாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளோ புதிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளோ இடம்பெறவில்லை என்று அவர் கூறுகிறார்.
கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் நான்கு முஸ்லிம்களும் சிங்களர் ஒருவரும் அமைச்சர்களாக பதவி வகிக்கின்றார்கள். தமிழர்கள் எவரும் அமைச்சராக இல்லை.
சிற்றூழியர் நியமனம் தொடக்கம் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வரை தமிழர்களுக்கு அமைச்சர்களினால் பாராபட்சம் காட்டப்படுவதாக பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா. துரைரெத்தினம் குற்றஞ்சாட்டுகிறார்.

பொம்மை ஆட்சி
அமைச்சர் மறுப்பு
பொம்மை ஆட்சி
அமைச்சர் மறுப்பு
அமைச்சர் மறுப்பு
கிழக்கு மாகாண சபையில் மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆட்சி அமைப்பதற்கு பெருன்பான்மை தேவைப்பட்டபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது. அக்கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாகவும் தற்போது பதவி விக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினரான ரம்ழான் அன்வர் தற்போதைய ஆட்சி தன்னைப் பொறுத்தவரை பொம்மை ஆட்சி என்கிறார்.
முஸ்லிம் ஒருவர் தற்போது முதலமைச்சர் பதவியிருந்தும் காணி பிரச்சினை உட்பட சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறமுடியாத நிலையில் அந்த பதவியிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எத்தகைய கருத்துக்களை கொண்டிருந்தாலும் கிழககு வாழ் மூவினங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய தமது செயல்பாடுகள் இருப்பதாக அமைச்சர்கள் வாரியத்தின் பேச்சாளரும் மாகாண வீதி அபிவிருத்தி , வீடமைப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சரான எம். எஸ். உதுமாலெப்பை கூறினார்.
தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளில் இனரீதியான பாகுபாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

மூலம்: BBCTamil
மூலம்: BBCTamil
கட்சித் தலைமையை
ஏற்றுக்கொள்ளத் தயார் – சஜித் பிரேமதாச
கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசியக்
கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின்
மத்திய செயற்குழுவும், பாராளுமன்றக் குழுவும் ஏகமனதாக தீர்மானித்து தலைமைப் பொறுப்பை
வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு நகர்த்த
பாடுபடத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தலைமைப் பொறுப்பை
ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என சில தரப்பினர் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை
எனவும அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சித் தலைமைப்
பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயற்படத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
globaltamilnews
கிழக்கு மாகாணத்தில் சில ஆசிரியர் நியமனங்கள் இரத்து
கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பாடநெறியை பூர்த்தி செய்து ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள பல ஆசிரியர்களின் நியமனங்களை இரத்து செய்யுமாறு மாகாண கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவால் மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றின் காரணமாகவே ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தால் வழங்கப்பட்ட டிப்ளோமா சான்றிதழ், பட்டப்படிப்புக்கு சமநிலை ஆகாது என்பதை மேற்கோள் காட்டி மாகாண கல்வி அமைச்சுக்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த ஆசிரியர்களுக்கான நியமனங்களை ரத்து செய்யுமாறும் சேவை காலத்திற்குள் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருப்பின் அதனை மீள அறவிடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
newsfirst
முதலமைச்சர் பதவிக்குரியவராக விக்னேஸ்வரன் தேர்வு
இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் திங்களன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ விருந்தகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தேர்தலில் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் மாவை சேனாதிராஜா உட்பட ஏனைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து, 1988 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த மாகாண சபை செயலிழந்து போனது. பின்னர் வடக்கும் கிழக்கும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.
ஆயினும் அப்போது உறுதியளிக்கப்பட்ட மாகாண மட்டத்திலான அதிகாரங்களைக் கொண்ட வட மாகாண சபைக்கான தேர்தல் 25 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக இப்போதுதான் நடந்தேறியிருக்கின்றது.
இந்தத் தேர்தலில் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி வரலாற்று ரீதியான சாதனையைப் படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.