சீனாவில் கடும் சூறாவளி: மீன்பிடிப் படகுகள் மூழ்கியதில் 74 பேர் மாயம்
சீனாவின் தெற்குப்பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இருந்து ஐந்து மீன்பிடி படகுகள் ஞாயிறன்று கடலில் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 171 மீனவர்கள் சென்றுள்ளனர். சீனாவின் ஹைனான் தீவிலிருந்து 330 கி.மீ தொலைவில் சென்று
அதிகரித்து வரும் நிர்வாகச் செலவுகள், எரிபொருள் விலையேற்றங்கள் போன்றவை ஒருபுறம் விமான நிறுவனங்களின் பயணக் கட்டணங்களை அதிகரித்துக் கொண்டே போகின்றது. மறுபுறம் தொழில் போட்டி காரணமாக அந்நிறுவனங்கள் பயணிகளை தம் பக்கம் இழுக்கச் செய்யும் உத்தியாக சலுகைகளையும் அறிவிக்க வேண்டியுள்ளது. சென்ற தலைமுறைக்கு அளிக்கப்பட்ட, கையில் கொண்டு செல்லும் பொருட்களுக்கு கட்டணமில்லாத சலுகைகள் போல் இல்லாமல், இப்போது பயணிகளின் பயணத்தரத்தை உயர்த்தும் விதமான சலுகைகளை பயணிகளுக்கு இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
விமானத்தில் காலை நீட்டி அமர்வதற்கு ஏற்ப இடவசதி, முன்னதாகவே இருக்கைகளில் அமரும் வசதிகள் மற்றும் அமைதியான வரவேற்பறைகள் போன்றவை ஆரம்ப காலத்தில் சலுகைகளாகக் கருதப்பட்டது. தற்போதோ தனித்தனியே சினிமா பார்க்கக்கூடிய விதத்தில் பயணிகளுக்கு அளிக்கப்படும் ஆப்பிள் நிறுவன ஐபாடுகள், விற்பனைக்கு அளிக்கப்படும் உயர்தரமான சூடான உணவு வகைகள், பக்கத்து இருக்கை காலியாக இருக்கவேண்டுமெனில் அதற்கென உபரிப் பணம் செலுத்தக்கூடிய வசதி போன்றவை பயணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, விருப்பப்பட்டால் அவர்களுடைய பெட்டிகளை பயணிகளின் வீட்டிலோ, அலுவலகத்திலோ விமான நிறுவனமே கொண்டு சேர்த்துவிடும் அதிகப்படியான வசதியும் உள்ளது.
இதுதவிர, எதிர்காலத்தில், ஒவ்வொரு பயணியின் தனிப்பட்ட தகவல் தொகுப்பை உபயோகப்படுத்தி அவர்களுக்குத் தங்களின் பயணம் தனிப்பட்டது என்று தோன்றும் வண்ணம் வசதிகள் செய்துகொடுக்கும் எண்ணமும் இவர்களிடத்தில் உள்ளது. சாதாரணமாக பயணிப்பது என்பதிலும் மாற்றங்கள் ஏற்படத் துவங்கியுள்ளது. ‘அனைவரின் பயணங்களையும் தனிப்பட்டதாக்கும் முயற்சி இது’ என்று அமெரிக்காவின் எல்.ஈ.கே. கன்சல்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான்.எப்.தாம்சன் இந்தப் புதிய திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

ஏவுகணைகளை சுமந்து 1700 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆளில்லா போர் விமானம்: ஈரான் அறிமுகப்படுத்தியது
ஈரான் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்ட சில ஆளில்லா நவீனரக உளவு விமானங்களை ஈரான் விமானப்படை சிறை பிடித்து வைத்து வல்லரசு நாடுகளை மூக்கின் மீது விரலை வைக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், போர் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமந்தபடி மணிக்கு ஆயிரத்து 700 கி.மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 24 மணி நேரங்களுக்கு பறக்கவல்ல ஆளில்லா அதிநவீன போர் விமானத்தை அந்நாட்டின் விமானப்படையுடன் ஈரான் இணைத்துள்ளது.
'ஷஹித்-129' என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 8 வெடிகுண்டுகள் அல்லது ஏவுகணைகளை சுமந்தபடி வெகுநீண்ட தூரத்தையும் குறுகிய நேரத்தில் சென்றடைந்து, அசையும் மற்றும் அசையா இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல்மிக்கது என ஈரான் விமானப்படை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.