Sunday, August 21, 2011

மனித மூளையைப் போல் செயற்படும் புதிய கணினி சிப்





IBM நிறுவனம் மனித மூளையைப் போல் சுற்றுச்சூழலை விளங்கிச் செயற்படும், மற்றும் சிக்கலான விடயங்களை உணர்ந்துகொள்ளும் தன்மையுடன் ஒரு சிப்பினை உருவாக்கியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுகளாகக் கணினிகளை நிகழ்ச்சி நிரற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட சிப்களிற்குப் பதிலாக இந்தப் பரீட்சார்த்த சிப்பானது புதியதொரு கணினித் தலைமுறையை உருவாக்கப்போகின்றது. இவை ‘அறிவாற்றல் மிக்க கணினிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சிப்கள் SyNAPSE எனும் திட்டத்திற்குள் ஒரு படி முன்னேற்றகரமான செயற்பாடாக உருவாகியுள்ளது. போக்குவரவு வெளிச்சங்களில் தோற்றம், ஒலிகள், நுகர்வுகள் மற்றும் ஆபத்துக்களின் முன்னர் பாதுகாப்பற்ற நிலையை வெளிப்படுத்தவும் கூடிய தன்மை இருப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அல்லது தமது சூழலைப் புரிந்துகொண்டு செயற்படும் சேர்வர்கள், மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகளையும் கற்பனைசெய்து பாருங்கள்.

இவ்வருடம் அமெரிக்காவில் இடம்பெற்ற ‘Jeopardy’ புதிர்ப்போட்டியில் இரு மனிதர்களைத் தோற்கடித்த IBM கணினியான வற்சன் சுப்பர்கம்பியூட்டரைப் போல அதிவேகமானதாக இந்த சிப்களின் சக்தி இருக்காது.

இந்தச் சிப்பின் வேறு பயன்பாடுகளாக, உலகின் நீர் விநியோகத்தினை அதாவது வெப்பநிலை, அமுக்கம், அலை உயரம் மற்றும் ஒலியலைகள் போன்ற அளவுகளைக் கணித்து சுனாமி ஏற்படுமா இல்லையா என்பதைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யக்கூடிய கணிப்பினையும் கொண்டிருக்கும்.

அதேபோல ஒரு பலசரக்குக் கடைக்காரரிடம் இது இருந்தால் பொருட்களின் தோற்றம், மணம், வெப்பநிலை போன்றவற்றைக் கணித்து அவை பழுதாகிவிட்டன என்றும் கூறும்.

தற்போதுள்ள கணினிகள் கணக்கிடும் இயந்திரங்களாகவே உள்ளன என்று கூறும் இந்நிறுவனம் மனித மூளையைப் போல யோசிக்கும் அடுத்த கட்டத்திற்கு நாம் முன்னேறவேண்டும் என்கின்றது.