Tuesday, September 20, 2011

Youtube தரும் அசத்தலான புதிய வசதி



Youtube தளம் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. எந்த ஒரு வீடியோ வேண்டும் என்றாலும் இதில் கிடைக்கும் என்ற அளவுக்கு அவ்வளவு வீடியோக்கள் கொண்டுள்ளது. இது நாள் வரை நாம் வீடியோ Upload செய்தால் அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இப்போது உள்ள புதிய வசதி உங்கள் வீடியோ நல்ல Look உள்ளதாக மாற்ற உதவும்.

நீங்கள் உங்கள் வீடியோ Upload செய்து முடித்த உடன் உங்களது குறிப்பிட்ட வீடியோ பார்க்கும் இடத்துக்கு மேலே வீடியோ உங்களுடையது என்றால் படத்தில் உள்ளது போல Edit Video New என்ற வசதி இருக்கும்.


இதில் பொதுவாக இருக்கும் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்.

Trim:(Old) அச்சச்சோ வீடியோ இரண்டு நிமிடம் அதிகம் சேர்த்து விட்டோமே கொஞ்சம் Cut செய்ய வேண்டுமே என்று நினைத்து இருந்தால் இது உங்களுக்கு தேவை. உங்கள் Video Start, End point களை இதில் மாற்ற முடியும். இதன் மூலம் ஆரம்பம் அல்லது முடிவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்கி விடலாம்.

New*

Rotate: இதன் மூலம் உங்கள் வீடியோவை Right அல்லது Left ஆக Rotate செய்ய முடியும்.

Stabilize: இதன் மூலம் வீடியோவில் Shake இருந்தால் குறைக்க முடியும். ஆனால் இதை ஒரே கிளிக் மூலம் எப்படி இவர்கள் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

Fill Light, Contrast, Saturation, Color Temperature, இவையும் புதிது இதன் மூலம் உங்கள் வீடியோ Lighting , மற்றும் Color மாற்ற இயலும். இது உங்கள் வீடியோ ரொம்ப Dark என்று நீங்கள் நினைத்தால் எதாவது ஒன்றை முயற்சி செய்யலாம்.

Fill Light இதை பயன்படுத்தும் போது உங்கள் வீடியோ கொஞ்சம் பளிச் என்று இருக்கும்.அதாவது முகத்துக்கு கிரீம் பூசுவது போல.