Sunday, August 11, 2013

வேர்ட் பார்மட்டிங் புதுவகை

பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை இல்லை. அந்தச் சொல்லின் மீது கர்சரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்துங்கள். பின்னர், ரிப்பனில், ஹோம் டேப்பினைக் காட்டவும். அடுத்து Font குரூப்பில், Bold டூலின் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று வைத்த சொல் முழுவதும் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். இவ்வாறே, எந்த ஒரு டூலையும் இந்த முறையில் பயன்படுத்தலாம். Ctrl+U அழுத்தினால், சொல்லின் கீழாக அடிக்கோடிடப்படும். டாகுமெண்டின் பழைய மாறா நிலைக்கு, பார்மட்டிங் எதுவும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா? கர்சரை பார்மட் செய்த சொல்லுக்குள்ளாக நிறுத்திப் பின்னர், Ctrl+Space Bar அழுத்தவும்.
உங்கள் வேர்ட் புரோகிராமில் இந்த வசதி செயல்படவில்லை என்றால், அதனை வடிவமைக்கும்போது நீங்கள் ஏற்படுத்திய சில செட்டிங்குகளே காரணம்.
1. முதலில் வேர்ட் ஆப்ஷன் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டனை அழுத்திப் பின்னர் வேர்ட் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். 
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்க ஓரமாக உள்ள, Advanced option என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
3. Editing Options என்னும் பிரிவில், When Selecting Automatically Select Entire Word என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும். 
4. அடுத்து நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 
இந்த மாற்றங்கள், ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படுகையில், அது எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடுவது மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட வகையில் பார்மட்டிங் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் செட் செய்யப்படுகிறது. இந்த செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றால், முழு சொல்லும் தேர்ந்தெடுக்கப்படுவது நடைபெறாது.