தினம்தினம் ஒரு வசதியை அறிமுகம் செய்து வரும் பேஸ்புக் தளம் அவ்வப்போது சில குறைகளையும் சந்தித்து வருகிறது. அந்த குறைகளை நாம் பேஸ்புக் தளத்தில் முறையிட முடியும். சில சமயங்களில் அதற்கு பதில் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் பதில் எதுவும் வருவதில்லை. நாமாய் இருந்தால் அதை அப்படியே விட்டு விடுவோம். ஆனால் ஒருவர் Mark Zuckerber-ன் கணக்கை Hack செய்து என்ன பிரச்சினை என்பதை அவரது Time Line-இல் போஸ்ட் செய்துள்ளார்.
பேஸ்புக் தளத்தில் உங்கள் நண்பரல்லாத யாரும் உங்கள் Timeline-இல் எதையும் போஸ்ட் செய்ய முடியாது. ஆனால் யார் வேண்டுமானாலும் நமது Time Line-இல் போஸ்ட் செய்ய முடியும் என்ற குறையை Khalil Shreateh என்ற பாலஸ்தீனிய டெவலப்பர் கண்டுபிடித்தார். இது குறித்து அவர் பேஸ்புக்கிற்கு மின்னஞ்சல் செய்துள்ளார். ஆனால் பேஸ்புக்கில் இருந்து பதில் எதுவும் அவருக்கு வரவில்லை.
இரண்டாவதாக மறுபடி ஒரு மின்னஞ்சலில் என்னால் Mark Zuckerber-ன் Time line-இல் கூட போஸ்ட் செய்ய முடியும் என்று அனுப்பி உள்ளார். அதற்கும் பதிலில்லை. பொறுமை இழக்காத Khalil மறுபடி ஒரு மின்னஞ்சலை அனுப்ப அதற்கு “இது ஒரு குறையில்லை” என்று பதில் வந்திருக்கிறது. கடுப்பான Khalil இதை Mark Zuckerber-ன் Time Line-இல் எழுதினால் தான் தீர்வு கிடைக்கும் என்று எழுதி உள்ளார்.
இதற்கு பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து உடனடியாக பதில் வந்துள்ளது. அதில் என்ன குறை என்று மேலும் தெளிவாக கூறுமாறு கேட்டுள்ளனர் (!!!). இதற்கும் Khalil பொறுமையாக பதில் கூறி உள்ளார். அதன் பின் பேஸ்புக் தளம் அவர் Terms of Service ஐ மீரியதாக கூறி அவரது அக்கௌன்ட்டை பேஸ்புக் தளம் சஸ்பென்ட் செய்து விட்டது.
இந்த குறை பின்னர் சரி செய்யப்பட்டாலும், Khalil குறித்த செய்திகள் எதையும் பேஸ்புக் சொல்லவில்லை. தற்போது அவரது கணக்கை பேஸ்புக் தளம் Active செய்து விட்டது.
இதை எப்படி செய்தார் எனபதை ஒரு வீடியோவாக பகிர்ந்துள்ளார் Khalil. [இன்னொரு நபரின் Time Line-இல்]