Wednesday, August 31, 2011
குப்பையை மீள்சுழற்சி செய்யும் புதிய இயந்திரம்
கடந்த வருடங்களில் மீள்சுழற்சி விதிமுறைகளை ஒவ்வொரு வீடுவீடாகக் சென்று கூறிவந்தனர்.
ஆனால் தற்போது ஒருவர் தனது வீட்டிலேயே தரம்பிரிக்கத் தேவையில்லை. புதிய வகையான கழிவுத் தொழிற்சாலை உங்களைச் சிரமப்படவேண்டாம் என்கின்றது.
கழிவுகள் சேகரிக்கப்பட்ட பின்னர் உள்ளுர் கழிவிடங்களிலேயே Magpie இயந்திரத் தொகுதியால் இவை தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன.
இது மீள்சுழற்சியை இலகுவாக்குவதுடன் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றது. இது வீதிகளிலுள்ள பலதரப்பட்ட குப்பைக்கூடைகளையும் கூடக் குறைக்கின்றது.
ஒரு பகுதிக்குள்ளால் குப்பைகள் செல்லும்போது கட்புலாச் சிவப்புக் கதிர்களால் இவற்றின் மூலக்கூறுகள் பரிசோதிக்கப்பட்டு Magpie இன் மூளைக்குத் தரப்படுகின்றது. இதன்பின்னர் அது எந்தவகைக் கழிவெனத் தரம்பிரிக்கப்படுகின்றது.
தண்ணீர் அடைக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களாயின் வேறாகவும் பொதிசெய்யப் பயன்படும் பிளாஸ்ரிக்குகள் வேறாகவும் பிரிக்கப்படும்.
இவற்றின் அளவுகளைக் கணக்கிட்டு அவற்றை அது உடனடியாகவே மீள்சுழற்சிப்படுத்துகின்றது. மணிக்கு 5 தொன்களை இது மீள்சுழற்சியாக்குகின்றது.
ஒக்ரோபர் 1 இலிருந்து இது பிரித்தானியாவின் பேர்க்ஷயரின் பட்வேர்த் பகுதியில் முதன்முதலில் ஆரம்பித்துவைக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. அதன்பின்னர் படிப்படியாக இவை ஏனைய இடங்களிலும் செயற்படுத்தப்படும்.
பிளாஸ்ரிக்கில் 1 வீதத்தினை நாங்கள் மீள்சுழற்சி செய்கின்றோம் என்றால் எங்களால் 300,000 தொன் காபனீரொட்சைட்டையும் வெளிவருவதையும் தடுக்கமுடியும்.
இது லண்டனில் இருந்து சிட்னிக்கு 150 தடவைகள் விமானத்தில் சென்று திரும்பும் பயணத்தை ஒத்ததாகும் என்கின்றனர் இதனைத் தயாரித்த Veolia Environment Services நிறுவனம்.