Wednesday, August 31, 2011
Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்
வரலாற்றில் கண்டிராத பாரிய இரகசியக் காப்பு மாற்றத்தினைச் Facebook உருவாக்கியுள்ளது.
இதன் ஆரம்பகட்டமாக ஒருவர் யாருடன் படங்களைப் பகிர்ந்து கொள்கின்றார் என்பதும் update களின் நிலைமை மற்றும் இட அமைப்புக்கள் என்பனவும் கூடுதலானளவில் தெளிவுபடுத்தப்படுகின்றன.
நீங்கள் யாருடன் படங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றீர்களோ அதை இலகுவாக்கவே விரும்புகின்றோம் என்கின்றது Facebook. ஒரு டசினுக்கும் மேலே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை எல்லாமே முக்கியமாக இரு பகுதிகளில்தான் இடம்பெற்றுள்ளன.
ஒன்று, பயனாளர்கள் கணக்குகளில் இரகசியப் பாதுகாப்பு மாற்றங்களைச் செய்கின்றது. மற்றையது, பயனாளர்கள் எவ்வாறு தமது உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்பதில் செய்கின்றது.
தற்போது இந்த profile கட்டுப்பாடுகள் பக்கத்தின் வலதுபக்கத்தில் தடித்த எழுத்துக்களில் காணப்படும்.
கடந்த காலங்களில் ஒருவர் உங்களது படங்களை அல்லது இசைகளை Privacy Settings பக்கத்தினூடாகச் சென்றே பார்க்கமுடியும்.
தற்போது இந்தச் சரி செய்தல்கள் எல்லாம் ஒவ்வொரு பயனாளர் பக்கத்திலும் நீங்கள் உங்களது திருத்தங்களைச் செய்யும்போது வலது பக்கத்தில் தோன்றும்.
View Profile As எனும் அமைப்பையும் Facebook தனது பக்கத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.
இது உங்களது நண்பர் ஒருவர் உங்களது பக்கத்தைப் பார்க்கும்போது எப்படியிருக்குமோ அவ்வாறே உங்களையும் பார்க்க விடுகின்றது.
ஆனால், இது நீங்கள் ஒவ்வொரு தடவையும் உங்களது பக்கத்திற்குள் செல்லும்போதும் வலதுபக்க மேல் மூலையில் தோன்றும்.
தற்போது பயனாளர்களால் யாராவது தம்மைப் பார்க்கமுன்னரே ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடிகின்றது. இது படங்கள், இடங்கள் மற்றும் விளம்பரங்களையும் உள்ளடக்குகின்றது.
தற்போது நீங்கள் ஒரு Facebook நண்பர் அல்லாமல் இருந்தாலும் கூட யாரையுமே இணைத்துக் கொள்ளலாம். இது இன்னும் பலரை இணைத்துக் கொள்ளச் சந்தர்ப்பமளிக்கின்றது.
ஒருவருடன் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதானது அவர் Facebook நண்பராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை Facebook கூறுகின்றது.
Publisher சட்டத்தில் இடங்களையும் நேரடியாக இணைக்கலாம். உலாவியிலிருந்து அல்லது கைத்தொலைபேசி மென்பொருட்களிலிருந்து நீங்கள் ஓர் இடத்தைக் குறிக்கலாம்.
இத்துடன் GPS இல் குறிக்கமுடியாத குறுகிய தூரங்களிலுள்ள இடங்களின் அமைவிடத்தினையும் இதன்மூலம் குறிக்கலாம்.
இதன் விளைவாக, iOS மற்றும் Android பிரயோகங்களிற்கான ஐகொன்கள் இங்கு அவசியமில்லாமல் போவதால் இவை அகற்றப்பட்டுவிட்டன.
அதற்குரிய இடத்தில் புதிதாக Nearby எனும் ஐகொன் காணப்படுகின்றது. அத்துடன் பயனாளர்களால் பட அல்பங்களிற்கு அல்லது தனிநபர்ப் படங்களுக்கு அல்லது வீடியோக்களுக்கும் இடங்களைக் குறிக்கமுடியும்.
Everyone எனும் தெரிவும் Public என வித்தியாசங்காண்பதற்காக மாற்றப்பட்டுள்ளது.
கடைசி மாற்றமாக ஒருவர் தன்னை Facebook உள்ளடக்கத்திலிருந்து அகற்ற முயலும்போதும் அதிக தெரிவுகளை வழங்குகின்றது. இதில் 3 தெரிவுகள் காணப்படுகின்றன.
ஒன்று, உங்களது படத்தினை அகற்றலாம், இரண்டு படத்தை ஏற்றியவரை அப்படத்தை அகற்றுமாறு வேண்டலாம், மூன்று அந்நபரை Facebook இலிருந்து தடுக்கலாம்.
இரகசியக் காப்புத் தன்மைக்காக விமர்சிக்கப்பட்ட செயல்களுக்குப் பதிலாகவே இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவெனக் கூறலாம். இம்மாற்றங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்றே கூறலாம்.