அமெரிக்க கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டொரோலா மொபிலிட்டியை வாங்கப்போவதாக இணையத்துறை பிரபல நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது.
மென்பொருள் நிறுவனமாக இருந்துவரும் கூகுள் இந்த முடிவின் மூலம் கருவிகளின் உற்பத்தித்துறைக்குள் பெரிய அளவில் நுழைந்துள்ளது எனலாம்.
பன்னிரண்டரை பில்லியன் டாலர்கள் ரொக்கப் பணமாக கொடுத்து இந்த நிறுவனத்தை கூகுள் வாங்குகிறது.
கூகுளின் அண்ட்ரோய்ட் ஒப்பரேட்டிங் சிஸ்டத்தை அதாவது கைத்தொலைபேசிகள் இயக்க மென்பொருளை மோட்டொரோலா கைத்தொலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், கடந்த சில வருடங்களாக ஆப்பிள், சம்சங், எச்.டி.சி. ஆகிய போட்டி நிறுவனங்களின் ஆதிக்கத்தை அடுத்து மோட்டரோலா கைத்தொலைபேசிகள் விற்பனை குறைந்துள்ளது.