Tuesday, August 16, 2011

பேஸ்புக்கால் பரீட்சையில் தோற்கும் பாடசாலை மாணவர்கள்


நாளாந்தம் பேஸ்புக் கணக்குகளை அல்லது வேறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பிள்ளைகள் பள்ளிகளில் குறைவான புள்ளிகளைப் பெறுகின்றனரென அமெரிக்க ஆய்வொன்று கூறுகின்றது.

அத்தளத்துடன் அதிக நேரத்தைக் கழிப்பதனால் இவர்களது பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதுடன் மோசமான குணத்தினையும் பெறுகின்றனர் என கூறப்படுகின்றது.

இதனால் வளர வளர இவ்வாறான சமூக வலையமைப்புக்களால் எதிர்மறைத் தாக்கங்களுடனேயே இவர்கள் வளர்கின்றனரென இவ்வாய்வு கூறுகின்றது.

தமது பேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பதற்காக அவசரமாகப் படிப்பதால் முக்கியமாகப் படிக்க வேண்டிய பாடங்களை 15 நிமிடங்களே பார்க்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 3 நிமிடங்களும் இவர்கள் தமது செயற்பாட்டிலிருந்து விலகுகின்றார்கள். 15 நிமிடத்திற்கொரு தடவை பேஸ்புக் இனைப் பார்த்தாலே அவர்கள் மோசமான மாணவர்களாகி விடுவார்கள்.

இளையோர்களுக்கிடையே சமூக ஈர்ப்பொன்றை பேஸ்புக் ஏற்படுத்தியிருப்பதை மறுக்கமுடியாது.

இதனால் நாங்கள் தற்போது இதன் நன்மை தீமைகள் பற்றி ஆராயவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்கின்றனர் மனோதத்துவவியலாளர்கள்.

13 வயதிற்குட்பட்ட பிள்ளைகளும் ஆவலினால் இதற்கு அடிமையாகிப் போயுள்ளனர் என்றும் இதனால் இவர்களுக்கு மன அழுத்தம், வேறு மனரீதியான குழப்பங்கள், நித்திரையின்மை மற்றும் வயிற்றுக்குத்து என்பன ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.

எனினும் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தாழ்வு மனப்பான்மையுள்ள பிள்ளைகளையும் சமூகத்தில் இணைக்கப் பயன்படுகின்றது என்பதையும் மறுக்கமுடியாது.

இதனால் பெற்றோர்கள்தான் தமது பிள்ளைகளின் இணைய செயற்பாடுகளைத் தொடர்ந்து பரிசோதித்தபடி இருக்கவேண்டும்.