Saturday, August 13, 2011
Smartphones களின் வரவால் GPS விற்பனையில் வீழ்ச்சி
அண்மைக்காலங்களில் போக்குவரவு மற்றும் வரைபட அமைப்புக்கள் கார்களிலும் கைத்தொலைபேசிகளிலும் சாதாரணமாகக் காணப்படுவதால் தனிநபர் வழிகாட்டல் கருவியான GPS இன் பயன்பாட்டில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.
இது காமின் மற்றும் ரொம்ரொம் NV நிறுவனங்களை வேறு புதிய திட்டங்களை உருவாக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது.
வட அமெரிக்கச் சந்தைகளில் 25 வீதமும் ஐரோப்பியச் சந்தைகளில் 10 வீதமும் வீழ்ச்சியேற்படுமென காமின் எதிர்பார்க்கும் அதேவேளை ரொம்ரொம் நிறுவனம் உலகளாவில் 15-20 வீத வீழ்ச்சியையும் வட அமெரிக்காவில் ஆகக்கூடிய சரிவையும் எதிர்பார்க்கின்றது.
41.5 மில்லியன் தொகுதிகள் 2010 இல் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது 39.2 மில்லியன் நட்டத்தைக் கொண்டுவருமென HIS iSuppli சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Berg Insight எனும் ஆய்வு நிறுவனத்தின் முடிவானது இச்செயற்பாடு 2015ம் ஆண்டளவில் 5 வீதத்தால் 34 மில்லியனிற்குக் குறையும் என்கின்றது.
ஸ்மாட்ஃபோன் உற்பத்தியாளர்களான Nokia மற்றும் கூகிள் நிறுவனத்தினரால் இலவசமான வழிகாட்டல் கிடைப்பதால் அவை GPS களின் பயன்பாட்டை அருகச் செய்துள்ளன.
இவ்வருடம் மட்டும் 135 மில்லியன் வழிகாட்டல் வசதி கொண்ட கைத்தொலைபேசிகள் விற்கப்படுமென HIS எதிர்பார்க்கின்றது. இது 2013 இல் 269 மில்லியனாக இரு மடங்காகும் என்றும் கூறுகின்றது.
இதனால் காமினும் ரொம்ரொம்மும் தமது வீழ்ச்சியைச் சரிப்படுத்தும் நோக்கில் வேறுவிதமாகத் தமது முன்னேற்றத்தைக் கொண்டுசெல்லத் தீர்மானிக்கின்றன.
இவையும் வாகன மற்றும் கைத்தொலைபேசி விற்பனையில் தமது பதிப்பை மேம்படுத்தவுள்ளன.
காமின் நிறுவனத்தின் GPS பயன்படுத்தப்படும் வேறு சூழ்நிலைகளைப் பார்க்கையில், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான GPS உணரிகளுடனான மணிக்கூடுகளைத் தயாரிப்பதில் தனது நிலையான இடத்தைத் தக்கவைத்துள்ளது.
மேலும் இது கடற்பயணங்களிற்குத் தேவையான வரைபடங்கள், மீன்களைக் கண்டுபிடித்தல் போன்ற செயற்பாடுகளிலும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
எனினும் 2012/13 களில் இந்த நிலை தலைகீழாக மாறலாமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.