Wednesday, September 28, 2011
Airtel 3G வலையமைப்பை கொடுத்துவிட்டது...
Airtel தற்போது திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு தனது 3G வலையமைப்பை கொடுத்துள்ளது. திருகோணமலைக்கு 3G வலையமைப்பை விரைவில் தருவோம் தருவோம் என்று சொல்லி சுமார் ஒருவருடத்திற்கு மேல் ஏமாற்றிய இந்த Airtel அன்மையில் எடிசலாட் வலையமைப்பு திருகோணமலையில் 3G வலையமைப்பை கொடுத்ததை கண்டு சகிக்க முடியாமல் ( போட்டி போட முடியாமல்) Airtel தனது 3G Network ஐ திருகோணமலைக்கு மிக மிக விரைவாக வழங்கியது என்றுதான் சொல்ல முடியும் (போட்டி என்றால் இப்படித்தான் இருக்கனும்)...
தெற்காசியாவில் முதன் முதலாக 4G Network ஐ அறிமுகப்டுத்தியது Dialog நிறுவனம் தான். ஆனால் இது இன்னும் பாவனைக்கு வரவில்லை சோதனை கட்டத்தில் தான் இருக்கிறது....நாங்களும் இருக்கிறம்டு சொல்லி Mobitel நிறுவனமும் இந்த 4G Network இல் இறங்கியுள்ளது....Airtel , Etisalat எப்போது இந்த பணியில் இரங்கும்??
நான் Hutch வலையமைப்பை குறிப்பிட தவறியதற்கான காரணம் இன்னும் இவர்கள் 3G Network ஐ கூட வழங்கவில்லை என்பதற்காகத்தான் ஆனால் இந்த வருட இறுதிக்குல் தருவோம் என்று கூறி இருக்கிறார்கள் பார்ப்போம்...
திருகோணமலையில் 3g Network இல்லாமலையே கொடி கட்டி பரந்த இந்த Airtel.....இப்போது 3G Network உடன் வருகிறது....சொல்லையா வேண்டும்....
Tuesday, September 20, 2011
Youtube தரும் அசத்தலான புதிய வசதி
Youtube தளம் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. எந்த ஒரு வீடியோ வேண்டும் என்றாலும் இதில் கிடைக்கும் என்ற அளவுக்கு அவ்வளவு வீடியோக்கள் கொண்டுள்ளது. இது நாள் வரை நாம் வீடியோ Upload செய்தால் அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இப்போது உள்ள புதிய வசதி உங்கள் வீடியோ நல்ல Look உள்ளதாக மாற்ற உதவும்.
நீங்கள் உங்கள் வீடியோ Upload செய்து முடித்த உடன் உங்களது குறிப்பிட்ட வீடியோ பார்க்கும் இடத்துக்கு மேலே வீடியோ உங்களுடையது என்றால் படத்தில் உள்ளது போல Edit Video New என்ற வசதி இருக்கும்.
இதில் பொதுவாக இருக்கும் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன்.
Trim:(Old) அச்சச்சோ வீடியோ இரண்டு நிமிடம் அதிகம் சேர்த்து விட்டோமே கொஞ்சம் Cut செய்ய வேண்டுமே என்று நினைத்து இருந்தால் இது உங்களுக்கு தேவை. உங்கள் Video Start, End point களை இதில் மாற்ற முடியும். இதன் மூலம் ஆரம்பம் அல்லது முடிவில் தேவை இல்லாத பகுதிகளை நீக்கி விடலாம்.
New*
Rotate: இதன் மூலம் உங்கள் வீடியோவை Right அல்லது Left ஆக Rotate செய்ய முடியும்.
Stabilize: இதன் மூலம் வீடியோவில் Shake இருந்தால் குறைக்க முடியும். ஆனால் இதை ஒரே கிளிக் மூலம் எப்படி இவர்கள் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை.
Fill Light, Contrast, Saturation, Color Temperature, இவையும் புதிது இதன் மூலம் உங்கள் வீடியோ Lighting , மற்றும் Color மாற்ற இயலும். இது உங்கள் வீடியோ ரொம்ப Dark என்று நீங்கள் நினைத்தால் எதாவது ஒன்றை முயற்சி செய்யலாம்.
Fill Light இதை பயன்படுத்தும் போது உங்கள் வீடியோ கொஞ்சம் பளிச் என்று இருக்கும்.அதாவது முகத்துக்கு கிரீம் பூசுவது போல.
இலங்கையில் அசுர வேகத்தில் இன்டநெட் - Etisalat
இப்போது புதிதாக வந்து இருக்கும் எடிசலாட் கிண்ணியா மக்கள் மனதில் ஒரு சிறிய இடத்தை பிடித்து இருக்கிறது எனலாம். காரணம் எடிசலாட் வலையமைப்பு கிண்ணியாவில் 3G சேவையை அன்மையில் வழங்கியது.இது பல்வேறு வகையான சலுகைகள் மற்றும் ஏனைய வலையமைப்புக்களில் இல்லாத சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
Etisalat இல் முற்கொடுப்பனவுக்கு இன்டநெட் பயன்படுத்த...
To activate a package, SMS below words to 2211
SMS D25 for Daily 50MB (Rs25)
SMS W49 for 1week 150MB (Rs49)
SMS W99 for 2Weeks 350MB (Rs99)
SMS M299 for Monthly 1GB (Rs299)
நீங்கள் activate செய்யும் ஒவ்வொருpackage இற்கும் இலவச அழைப்புக்கள் வலையமைப்பிற்கும் (E 2 E) மற்றும் வலையமைப்பிற்கு வெளியேயும் (E 2 O ) கிடைக்கும்.
மேற்கூறப்பட்ட அனைத்திலும் அரச வரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
.
Dongle இல் Sim ஐ போட்டு நெட் பாவிக்கும் போது Net இற்கு உரிய மீதியை பார்ப்பது எப்படி?
Dialog
மீதியை அறிந்து கொள்வதற்கு MBB என டைப் செய்து 678 இற்கு அனுப்புங்கள்.
Mobitel
மீதியை அறிந்து கொள்வதற்கு DB என டைப் செய்து 7678 இற்கு அனுப்புங்கள்.
இப்போது Mobitel ஒரு புதிய package ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.
Rs.368 - 1GB - 1 month
செயற்படுத்திக்கொள்ள D299 என டைப் செய்து 7678 இற்கு அனுப்புங்கள்.
Etisalat
மீதியை அறிந்து கொள்வதற்கு BAL என டைப் செய்து 2211 இற்கு அனுப்புங்கள்.
Wednesday, September 14, 2011
கூகுலின் அதிரடி சாதனை - இனி எல்லோரும் சுகவாசி தான்
நாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.
உலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).
தரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம் 125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா, ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்பவற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
பரிசோதனையின் போது 95MB அளவுள்ள கோப்பை, வெறும் 9 செக்கன்களில் பதிவிறக்கி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
வெகு விரைவில் கூகுல் தனது 'கூகுல் பைபர்' என பெயரிடப்பட்டுள்ள இக் கண்டுபிடிப்பை உலகமெங்கும் விரிவுபடுத்தவுள்ளது.
இனி இணைய பாவனையாளர்கள் எல்லோரும் சுகவாசியாவார்கள் என நம்பலாம்.
Tuesday, September 13, 2011
You tube வீடியோவை கைபேசியில் பதிவிறக்க -
வீடியோ உலகின் முன்னணி தளமான YOU TUBE தளத்தில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் வீடியோக்கள் UPLOAD செய்ய படுகிறது .
இந்த YOU TUBE வீடியோவை மொபைலில் பதிவிறக்க பலத்தளங்கள் இருந்தாலும் ஒரு சிறந்த தளம் TUBE ZEN தளமாகும் . புதிதாக இன்று UPLOAD செய்யப்பட்ட வீடியோவாக இருந்தாலும் உடனே அந்த வீடியோவை உங்களுக்கு தரும் ஒரு அருமையான தளம் . இந்த தளத்தில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால் MP4,3GP HIGH ,3GP MED 3GP LOW ,MP3 ,ஆகிய FORMETக்களில் உங்களுக்கு வீடியோவை தருகிறது .
மொபைல் பயனாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள தளமாகும்.
இது கீழ் கண்ட நாடுகளின் அடிப்படையில் YOU TUBE வீடியோக்களை தேடுகிறது .
Saturday, September 10, 2011
விற்பனைக்கு வருகிறது Yahoo !
தனது CEO கார்ல் பட்ஸை ஒரு போன்கால் மூலம் தூக்கியடித்த யாஹூ நிறுவனம், இப்போது விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாஹூவின் நிலைமை பெரும் நெருக்கடியில் உள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
கார்ல் பட்ஸ் கடந்த இரு ஆண்டுகளாக மிக மிக மோசமாகப் பணியாற்றியதாகவும், இதனால் நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பும் கூட வீழ்ச்சி கண்டுள்ளதாகவும்ய யாஹூ இயக்குநர் குழு கருதுகிறது.
அப்படியெனில், கடந்த இரண்டாண்டுகளுக்கும்மேல், இந்த இயக்குநர் குழு தூங்கிக் கொண்டிருந்ததா? சேர்மன் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் நிபுணர்கள்.
நிலைமையை சமாளிக்க உடனடியாக நிறுவனத்தைக் கைமாற்றிவிட யாஹூ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
காரணம், யாஹூவின் சரிந்துவிட்ட இமேஜை தூக்கி நிறுத்த அதன் வலுவான பிரிவுகளான மீடியா, செய்தி மற்றும் தொடர்புத் துறைகளில் மேலும் முதலீட்டை அதிகரித்தாக வேண்டும்.
புதிய டீம், தரமான சேவையை தந்துதான் இதனைத் தக்க வைக்க முடியும். இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள இடைக்கால CEO இதனை எந்த அளவு செயல்படுத்துவார் என முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இந்த சூழலில் நிறுவனத்தை விற்றுவிடலாம் என்ற முடிவை இயக்குநர் குழு ஏக மனதாக வரவேற்றுள்ளது. பொருத்தமான, தகுதி மிக்க வாங்குநர் வந்தால், ஏஎந்த நேரமும் யாஹூ கைமாறலாம் என்பதே இப்போதைய நிலைமை!
Friday, September 9, 2011
Gmail அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சேவை
Google நிறுவனத்துடைய மின்னஞ்சல் சேவையான G mail ஐ பயன்படுத்தாதவர் குறைவு என்று தான் கூறமுடியும்.அந்த அளவிற்கு தினம் தினம் புது புது வசதிகளை தந்து கொண்டு இருக்கிறது.அதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது " SMS Chat in Gmail "
நீங்கள் Gmail இல் இருந்து , உங்கள் நண்பர் SMS மூலம் , இருவரும் Chat செய்து கொள்ள முடியும். இது இலவசம் என்றாலும் எல்லா நாட்டுக்கும் பொறுந்தாது...கீழ் உள்ள நாடுகளில் ஒரு சில வலையமைப்புக்கு மட்டும் பொறுந்தும்.
Afghanistan
Afghan Wireless Communication Company
Algeria
Nedjma
Angola
Unitel
Bahrain
Zain
Cameroon
MTN
Ghana
Airtel
Tigo
Indonesia
Indosat
Telkomsel
Tri
Iraq
Zain
Israel
orange
Pelephone
Jordan
Zain
Kazakhstan
Kcell
Kenya
Airtel
orange
Safaricom
Kuwait
Wataniya
Zain
Liberia
Cellcom
Malawi
Airtel
TNM
Maldives
Wataniya
Mozambique
Vodacom
Nigeria
Glo
Starcomms
Palestinian Territories
Jawwal
Wataniya Mobile
Philippines
Globe
SMART
Sun Cellular
Saudi Arabia
Mobily
STC
Zain
Senegal
orange
Tigo
Sri Lanka
Dialog
Mobitel
Tanzania
Vodacom
Tigo
Tunisia
Tunisiana
Uganda
Orange
MTN
Uganda Telecom
United States
All operators
Zambia
Airtel
MTN
Zamtel
இலங்கையில் Dialog , Mobitel மட்டுமே இலவசம், பயன்படுத்துவது எப்படி?
gmail இல் உள்நுழைந்து விட்டுSMS (Text messaging) enableசெய்துவிட்டு Save செய்து கொள்ளுங்கள்.
Saturday, September 3, 2011
வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெருமாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தல் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.
நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.
நண்பர்கள் இந்த பதிவு தற்பொழுது உங்களுக்கு உபயோகப்படாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் தேவைப்படும். புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
Subscribe to:
Posts (Atom)