Thursday, August 22, 2013

இயந்திரங்களின் இயக்கம் அறிய

பொதுவாகவே, ஒரு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் காண அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். நம் உடம்பின் உள்ளே என்னதான் நடக்கிறது, இந்த இயந்திரமும் எப்படி இயங்குகிறது என்பதைக் காணவும் நமக்கு ஆர்வம் தான். இதே ஆர்வத்துடன் அண்மையில் ஓர் இணையதளத்தைக் காண நேர்ந்தது. உடம்பின் இயக்கம் குறித்து தகவல் அல்லது படக் காட்சி இல்லை என்றாலும், 21 வகை இஞ்சின்கள் குறித்தும், அவை இயங்குவது குறித்தும், தகவல்களும், நகரும் படக் காட்சிகளும் தரப்படுகின்றன. இந்த செயல்பாட்டிற்கேற்ற வகையில், இந்த தளத்தின் பெயர் Animated engines எனத் தரப்பட்டுள்ளது. இந்த தளத்தின் முகவரிhttp://www.animatedengines. com/.
இந்த தளத்தில் தகவல்களைத் தேடிப் பெறுவது மிக மிக எளிதாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இயக்கம் காண விரும்பும் இஞ்சினைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்தால் போதும். உடனே, அந்த இஞ்சின் குறித்து படமும் தகவல்களும் உள்ள தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். முதலில், அந்த இஞ்சின் குறித்த பொதுவான மற்றும் தொழில் நுட்ப தகவல்கள் தரப்படுகின்றன. பின்னர் இயக்கம் காட்டப்படுகிறது. இன்னும் கீழாகச் சென்றால், இயக்கத்தின் ஒவ்வொரு நிலையும் காட்டப்பட்டு விளக்கப்படுகிறது. இதில் வேடிக்கையும், அதே நேரத்தில் சிறப்பான அம்சமும் என்னவென்றால், இஞ்சின் இயக்கம் காட்டப்படும் தளத்தின் மேலாக, இடது வலதாக இரண்டு அம்புக் குறிகள் உள்ளன. இவற்றை அழுத்தி, இயக்கத்தினை மெதுவாகவும், விரைவாகவும் அமைத்து ரசிக்கலாம். இதன் மூலம், ஓர் இஞ்சின் எப்படி இயங்கத் தொடங்கி, படிப்படியாக எப்படி முழுமையான இயக்கத்திற்கு வருகிறது என்பதனைத் தெளிவாக அறியலாம். சிறுவர்கள், ஒவ்வொரு இஞ்சினாக, அவர்கள் வாழ்க்கையில் அறிமுகமாகும் போது, இந்த தளத்தைக் காட்டி, அவற்றின் இயக்கம் குறித்து கற்றுக் கொடுக்கலாம். நாமும் அறிந்து கொள்ளலாம்.

கம்ப்யூட்டருக்கு புதியவரா? பைல்களின் வகைகள்

.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்.
.rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் இதனைத் திறந்து காட்டும். 
***.doc: மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தும் இந்த துணைப் பெயருடன் கிடைக்கும். எனவே இந்த துணைப் பெயர் இருந்தால் வேர்ட் தொகுப்பைத் திறந்து பைலைத் திறக்கலாம்.
***.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராமில் உருவாகும் பைல்கள் இந்த துணைப் பெயருடன் அமைக்கப்படும். எனவே எக்ஸெல் புரோகிராம் அல்லது வேறு ஏதேனும் ஸ்ப்ரெட் ஷிட் புரோகிராம் ஒன்றில்தான் இதனைத் திறக்க முடியும். 
.ppt: விண்டோஸின் பிரிமியர் பிரசன்டேஷன் பேக்கேஜ் ஆன பவர் பாய்ண்ட் தொகுப்பில் உருவாகும் பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். 
.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபட் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
*******htm / html: ஒரு பைல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் துணைப் பெயராகக் கொண்டிருந்தால் இது இன்டர்நெட்டில் பயன்படுத்த அமைக்கப்பட்டது என அடையாளம் கண்டு கொள்ளலாம். எனவே இதனை ஒரு வெப் பிரவுசர் புரோகிராமில் திறக்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் இதனைத் திறக்க இருமுறை கிளிக் செய்தால், அது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினைத் திறந்து இந்த பைலைக் காட்டும். அவ்வாறு காட்ட மறுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேறு வெப் பிரவுசர் மூலம் இதனைத் திறக்கலாம்.
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப்படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
சுருக்கப்பட்ட பைல்கள்: கீழே பைல்களை சுருக்கித் தருகையில் கிடைக்கும் பைல் வகைகளின் துணைப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவ்வாறு பைல்களைச் சுருக்கித் தருவதனை File compresseion என அழைக்கின்றனர். பைல்களின் அளவைச் சுருக்கி இணையம் வழி பரிமாறிக் கொள்ளவும் எடுத்துச் செல்லவும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 
.zip: இந்த துணைப் பெயருடன் ஒரு பைல் உங்களுக்கு வந்தால் அது சுருக்கப்பட்ட பைல் என்று பொருள். இத்தகைய பைல்களை விரித்துக் காட்ட இணையத்தில் நிறைய புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுவது விண்ஸிப் புரோகிராமாகும்.
******.rar: இதுவும் சுருக்கப்பட்ட பைலின் ஒரு வகையாகும். இதனைத் திறக்க சில ஸ்பெஷல் புரோகிராம் தேவைப்படலாம். WinRar என்ற புரோகிராம் இந்த பணியை மிக அழகாகச் செய்து முடித்திடும்.
.cab: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம் ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால் விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனை கேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர் தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவே இதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.

Tuesday, August 20, 2013

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகள்


1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.

3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).


6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.


7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.


8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.


9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.


10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.


11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.


12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.


13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.


14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.

15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.


16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

Monday, August 19, 2013

பேஸ்புக் நிறுவனர் Mark Zuckerber-ன் கணக்கு Hack செய்யப்பட்டது

தினம்தினம் ஒரு வசதியை அறிமுகம் செய்து வரும் பேஸ்புக் தளம் அவ்வப்போது சில குறைகளையும் சந்தித்து வருகிறது. அந்த குறைகளை நாம் பேஸ்புக் தளத்தில் முறையிட முடியும். சில சமயங்களில் அதற்கு  பதில் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் பதில் எதுவும் வருவதில்லை. நாமாய் இருந்தால் அதை அப்படியே விட்டு விடுவோம். ஆனால் ஒருவர் Mark Zuckerber-ன் கணக்கை Hack செய்து என்ன பிரச்சினை என்பதை அவரது Time Line-இல் போஸ்ட் செய்துள்ளார்.
பேஸ்புக் தளத்தில் உங்கள் நண்பரல்லாத யாரும் உங்கள் Timeline-இல் எதையும் போஸ்ட் செய்ய முடியாது. ஆனால் யார் வேண்டுமானாலும் நமது Time Line-இல் போஸ்ட் செய்ய முடியும் என்ற குறையை Khalil Shreateh என்ற பாலஸ்தீனிய டெவலப்பர் கண்டுபிடித்தார். இது குறித்து அவர் பேஸ்புக்கிற்கு மின்னஞ்சல் செய்துள்ளார். ஆனால் பேஸ்புக்கில் இருந்து பதில் எதுவும் அவருக்கு வரவில்லை.
இரண்டாவதாக மறுபடி ஒரு மின்னஞ்சலில் என்னால் Mark Zuckerber-ன் Time line-இல் கூட போஸ்ட் செய்ய முடியும் என்று அனுப்பி உள்ளார். அதற்கும் பதிலில்லை. பொறுமை இழக்காத Khalil மறுபடி ஒரு மின்னஞ்சலை அனுப்ப அதற்கு “இது ஒரு குறையில்லை” என்று பதில் வந்திருக்கிறது. கடுப்பான Khalil இதை Mark Zuckerber-ன் Time Line-இல் எழுதினால் தான் தீர்வு கிடைக்கும் என்று எழுதி உள்ளார்.
இதற்கு பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து உடனடியாக பதில் வந்துள்ளது. அதில் என்ன குறை என்று  மேலும் தெளிவாக கூறுமாறு கேட்டுள்ளனர் (!!!). இதற்கும் Khalil பொறுமையாக பதில் கூறி உள்ளார். அதன் பின் பேஸ்புக் தளம் அவர் Terms of Service ஐ மீரியதாக கூறி அவரது அக்கௌன்ட்டை பேஸ்புக் தளம் சஸ்பென்ட் செய்து விட்டது.
இந்த குறை பின்னர் சரி செய்யப்பட்டாலும், Khalil குறித்த செய்திகள் எதையும் பேஸ்புக் சொல்லவில்லை. தற்போது அவரது கணக்கை பேஸ்புக் தளம் Active செய்து விட்டது.
இதை எப்படி செய்தார் எனபதை ஒரு வீடியோவாக பகிர்ந்துள்ளார் Khalil. [இன்னொரு நபரின் Time Line-இல்]

தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?

ஆன்ட்ராய்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்ட்ராய்ட் பயனர்கள் நிறைய பேரின் கேள்வி அதில் எப்படி தமிழில் எழுதுவது, எது சிறந்த அப்ளிகேஷன் ?
1. Sellinam
தற்போது நான் பயன்படுத்தும் அப்ளிகேஷன் இதுதான். மிக எளிதாக எழுதும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில் கீபோர்ட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளது. தமிழ் மொழி கீபோர்டை பயன்படுத்தி எழுத விரும்பும் நண்பர்களுக்கு உகந்த அப்ளிகேஷன் இது தான். அதற்கான எழுதுவது கடினமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், மிக மிக எளிதாகவே உள்ளது. இதன் இன்னொரு சிறப்பு தமிழில் எழுதும் அதே நேரத்தில் உடனே ஆங்கிலத்துக்கு மாற இடது கீழ் மூலையில் உள்ள “மு/த” என்பதை கிளிக் செய்தால் போதும். அதே போல தான் தமிழுக்கும். குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருவதும் ஒரு சிறப்பம்சம்.
இதை தரவிறக்க – Sellinam
2. UKeyboard
செல்லினம் போலவே உள்ள இன்னொரு மாற்று கீபோர்டு இது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழ் மட்டுமின்றி இன்னும் 21 மொழிகளில் எழுதும் வசதி உள்ளது. தமிழில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குறிப்பாக Google Tamil Transliteration பயன்படுத்தி கணினியில் தமிழில் எழுதுபவர்களுக்கு உகந்த Application இது. இதிலும் குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருகிறது. மீண்டும் ஆங்கிலத்தில் எழுத நீங்கள் Input Method -ஐ தான் மாற்ற வேண்டும். இதன் ஒரு குறை சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழுக்கு மாறுவது இல்லை.

இதை தரவிறக்க - Keyboard Beta

Friday, August 16, 2013

கோப்பறைக்கான பூட்டினை உருவாக்க

பாதுக்காபு நலன் கருதியே ஒரு சில மிக முக்கியமான கோப்புகளை மட்டும் யார் கண்களிலும் படாமல் மறைத்து வைக்க என்னுவோம். கோப்புகள் மற்றும் கோப்பறைகளை பூட்டி வைக்க மென்பொருள் சந்தையில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன. அதற்கு மாற்று வழியாக மென்பொருள் துணையின்றி கோப்பறைகளை பூட்டி வைக்க நாமே ஒரு அப்ளிகேஷன் போன்ற ஒன்றை உருவாக்க முடியும். இதற்கு நோட்பேட் இருந்தால் போதுமானது ஆகும்.

முதலில் நேட்பேடினை திறந்து கொள்ளவும். பின் கீழ் உள்ள கோடினை நகலெடுத்து கொள்ளவும்.

cls
@ECHO OFF
title http://arafathonline.blogspot.com/
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Tcinfo goto MDTcinfo
:CONFIRM
echo Are you sure to lock this folder? (Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Tcinfo "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock Your Secure Folder
set/p "pass=>"
if NOT %pass%== tamil goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Tcinfo
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDTcinfo
md Tcinfo
echo Tcinfo created successfully
goto End
:End

இதில் சிகப்பு நிறத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களை உங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

தலைப்பு:  http://arafathonline.blogspot.com/
Tcinfo - கோப்பறையின் பெயர்
tamil - கடவுச்சொல்

பின் இதனை .bat பார்மெட்டில் சேமித்துக்கொள்ளவும். உதாரணமாக lock.bat என்று குறிப்பிட்டு பின் All Files என்று குறிப்பிட்டு சேமித்துக்கொள்ளவும். பின் இந்த lock.bat பைலை திறக்கவும்.
திறந்தவுடன் நீங்கள் குறிப்பிட்ட பெயரில் ஒரு கோப்பறை ஒன்று உருவாக்கப்படும். அந்த கோப்பறையில் எந்தெந்த தகவல்களை மறைக்க விருப்புகிறீர்களோ அவையனைத்தையும் நகர்த்தி கொள்ளவும். பின் மீண்டும் lock.bat பைலை திறக்கவும்.


தோன்றும் விண்டோவில் Y பொத்தானை அழுத்தி என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது குறிப்பிட்ட கோப்பறை மறைக்கப்படும். மீண்டும் அதை திறக்க விரும்பினால் அந்த lock.bat பைலை திறக்கவும். அப்போது கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும்.




அப்போது அந்த கோப்பறை திறக்கும். அதனை வழக்கம்போல பயன்படுத்திக்கொள்ள முடியும். இதே வழிமுறையை பின் பற்றி தேவைப்படும் கோப்பறைகளை மறைத்துக்கொள்ள முடியும்.

விண்டோஸ் பதிப்பு வரலாறு

WINDOWS VERSION HISTORY
WINDOWS 1.0
>16 Bit Os (1985)
WINDOWS 2.0
>16 Bit Os
WINDOWS 3.0
>16 Bit Os (1990)
WINDOWS 3.1
>16 Bit Os (1992)
WINDOWS NT 3.1
>32 Bit Os (1993)
WINDOWS 95
>Used WIN32 API
WINDOWS 98
WINDOWS ME
WINDOWS NT 4
WINDOWS 2000
(or also Known as
WINDOWS NT 5)
WINDOWS XP
(or also Known as
WINDOWS NT 5.1)
WINDOWS XP PROFESSIONAL
>Supports 64 Bit
WINDOWS SERVER 2003
WINDOWS VISTA (WINDOWS NT 6.0)
WINDOWS 7 (WINDOWS NT 6.1)
>WINDOWS 7 ULTIMATE
>WINDOWS 7 HOME
PREMIUM
>WINDOWS 7 HOME BASIC
>WINDOWS 7 PROFESSIONAL
>WINDOWS 7 STARTER
>WINDOWS 7 ENTERPRISE
WINDOWS SERVER 2012
WINDOWS 8 (WINDOWS NT 6.2)
>WINDOWS 8
>WINDOWS 8 Pro
>WINDOWS 8 ENTERPRISE
>WINDOWS 8 RT (FOR
TABLETS)
Abbrevation :
XP-EXTENDED PROCEDURE
NT-NEW TECHNOLOGY
RT-RUNTIME

Wednesday, August 14, 2013

கூகுள் Play டவுண்லோட் எச்சரிக்கை

தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. 

(ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோர் போல இது அமைக்கப்பட்டுள்ளது.) இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை. 

உலகெங்கும், மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், உலகெங்கும் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தையே இயக்குகின்றன. 

இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சென்ற ஏழு மாதங்களில், ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

செமாண்டெக் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. 

இந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர். 

இணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது. 

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 


ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே, டவுண்லோட் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும்.

Sunday, August 11, 2013

வேர்ட் பார்மட்டிங் புதுவகை

பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை இல்லை. அந்தச் சொல்லின் மீது கர்சரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்துங்கள். பின்னர், ரிப்பனில், ஹோம் டேப்பினைக் காட்டவும். அடுத்து Font குரூப்பில், Bold டூலின் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று வைத்த சொல் முழுவதும் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். இவ்வாறே, எந்த ஒரு டூலையும் இந்த முறையில் பயன்படுத்தலாம். Ctrl+U அழுத்தினால், சொல்லின் கீழாக அடிக்கோடிடப்படும். டாகுமெண்டின் பழைய மாறா நிலைக்கு, பார்மட்டிங் எதுவும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா? கர்சரை பார்மட் செய்த சொல்லுக்குள்ளாக நிறுத்திப் பின்னர், Ctrl+Space Bar அழுத்தவும்.
உங்கள் வேர்ட் புரோகிராமில் இந்த வசதி செயல்படவில்லை என்றால், அதனை வடிவமைக்கும்போது நீங்கள் ஏற்படுத்திய சில செட்டிங்குகளே காரணம்.
1. முதலில் வேர்ட் ஆப்ஷன் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டனை அழுத்திப் பின்னர் வேர்ட் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். 
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்க ஓரமாக உள்ள, Advanced option என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
3. Editing Options என்னும் பிரிவில், When Selecting Automatically Select Entire Word என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும். 
4. அடுத்து நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 
இந்த மாற்றங்கள், ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படுகையில், அது எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடுவது மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட வகையில் பார்மட்டிங் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் செட் செய்யப்படுகிறது. இந்த செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றால், முழு சொல்லும் தேர்ந்தெடுக்கப்படுவது நடைபெறாது.

இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற

இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

1. தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்: நாம் தகவல்களைத் தேடும் போதுதான், இது போன்ற ஆபாச தளங்கள், தகவல் பட்டியலில் தலை நீட்டுகின்றன. இதனைத் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் தளத்தினைப் பயன்படுத்துபவர்கள், http://www.google.com/ familysafety/; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். பிங் (Bing) தேடல் தளம் பயன்படுத்துபவர்கள்http://www.bing.com/preferences.aspx; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மற்ற தேடல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், அந்த தளங்கள் தரும் safety settings சென்று இந்த வசதியைக் காணலாம். உங்கள் வீட்டுச் சிறுவன் யு-ட்யூப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துபவனாக இருந்தால், அவற்றையும் “safe” modeல் அமைக்கவும். 
2. கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் குடும்ப பாதுகாப்பு வசதிகளைப் (family safety tools) பயன்படுத்தவும்.விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இந்த பாதுகாப்பு வசதிகளைத் தருகின்றன.

2. குடும்ப பாதுகாப்பிற்கான டூல்ஸ்: Parental Control என அழைக்கபட்ட இந்த டூல்ஸ் மூலம், நாம் தேவையற்றவை அல்லது ஆபத்தானவை என்று கருதும் விஷயங்கள் கொண்ட இணையப் பக்கங்கள் கொண்ட தளங்களைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டிகளை (filters) அமைக்கலாம். பாலியல் தளங்களை மட்டுமின்றி, வன்முறை சார்ந்த தகவல்கள் மற்றும் நாம் வெறுக்கும் பொருள் கொண்ட தளங்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம். நம் சிறுவர்கள் இளைஞர்களாய் வளர்ந்த பின்னர், சில தளங்கள் பார்க்கும் வகையில் இருக்கலாம். ஆனால், சில தளங்களை நாம் எப்போதும் வெறுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்போதும் நம் கம்ப்யூட்டரில் தோன்றாதபடி அமைக்கலாம். இதற்கான வடிகட்டிகளைத் தேடிப் பார்த்து, நமக்குத் தேவையானதைப் பயன்படுத்த வேண்டும். இந்த டூல்ஸ்களை நாம் மற்றும் நம் குடும்பத்தினர் பயன்படுத்தும், இணைய இணைப்பினைத் தரும் அனைத்து சாதனங்களிலும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். கம்ப்யூட்டர், கேம் கன்ஸோல், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள், பெர்சனல் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் என அனைத்திலும் இவை இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். சில டூல்ஸ்கள், இந்த அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டும் இயங்கும்படி இருக்கும்.

3. சிறுவர்களின் பிரவுசர்களை கண்காணிக்கவும்: சிறுவர்கள் பயன்படுத்தும் பிரவுசரின் ஹிஸ்டரியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். இப்போதெல்லாம் பாலியல் தளங்களில், பாலியல் சார்ந்த செயல்பாடுகளை, மூடி மறைக்கும் வகையில் சாதாரண சொற்கள் கொண்டு குறிக்கின்றனர். இவற்றை எல்லாம் கண்காணித்து, வடிகட்டிகளில் இவற்றைக் கொடுத்து அவற்றையும் தடை செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.

4. சமூக வளைதளங்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் சமூக வளைத்தளங்களில், அவர்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் வட்டத்தினைக் கண்காணிக்கவும். மிகவும் நெருக்கமான, நம்பிக்கையுள்ள நண்பர்களை மட்டும் இந்த வட்டத்தில் வைக்கவும். ஏனென்றால், நண்பர்கள் என்ற போர்வையில், முதலில் சாதாரணமாக அஞ்சல் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட பின்னர், பாலியல் தளங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இழுத்துச் சென்று, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் நிறைய பேர் இப்போது சமூகத் தளங்களில் இயங்கி வருகின்றனர். 

5. பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள போட்டோக்களை அவ்வப்போது கண்காணிக்கவும். இந்த சோதனையை, சோதனை ரீதியில் இல்லாமல், நட்பு ரீதியில் மேற்கொள்ளவும். “நம் பெற்றோர்கள், நம் மொபைல் போன்களை அவ்வப்போது பார்ப்பார்கள்” என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிய வேண்டும். “அப்படி பார்ப்பது நல்லதுதான்” என்று அவர்கள் கொள்ள வேண்டும்.
தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் அமைக்கும் வடிகட்டிகள், கண்காணிப்புகள் மட்டுமே, உங்கள் குழந்தைகளை பாலியல், வன்முறை, வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் தளங்கள் பக்கம் செல்லாமல் தடுக்கும் என்று எண்ண வேண்டாம். உங்கள் பிள்ளைகளிடம் இதனால் ஏற்படுத்தும் ஆபத்து, இது போல பிறருக்கு நேர்ந்தது போன்றவற்றை எடுத்துக் கூறவும். உங்கள் மனைவியுடன் அவர்களையும் அமர வைத்து, இதனால் ஏற்படும் தீங்குகளை, வாழ்க்கை பாதிப்புகளை, மற்றவர்களுக்கு நேர்ந்தவற்றை அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். இந்த அன்பு கலந்த எச்சரிக்கை தான் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட முடியும்.

Saturday, August 10, 2013

முகநூல் பயனர்கணக்கு போட்டோவையும் கவர் போட்டோவையும் ஒன்றினைக்க

முகநூல் தளத்தில் நாளுக்கு நாள் பயனாளர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் இந்த தளத்தில் புதுப்புது வசதிகள் புகுத்தப்பட்டு வருகிறன. அந்த வகையில் அன்மையில் புகுத்தப்பட்ட வசதிதான் கவர் போட்டோ ஆகும். இந்த கவர் போட்டோ அமைக்கும் போது ஒரளவுக்கு நம்முடைய பயனர் கணக்கு போட்டோவிற்கு ஏற்றாற் போல் அமைத்தால் மட்டுமே நம்முடைய பயனர் கணக்கு போட்டோ அழகூட்டப்பட்டு இருக்கும். இதற்கு பதிலாக பயனர் கணக்கு போட்டோ மற்றும் கவர் போட்டோ இரண்டையுமே ஒண்றினைத்து முகநூல் கவர் மற்றும் பயனர் கணக்கு போட்டோக்களை அமைத்துவிட முடியும்.

இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது. இந்த தளத்தில் குறிப்பிட்ட படத்தை தரவேற்றம் செய்தால் அந்த தளம் கவர் போட்டோ மற்றும் பயனர் கணக்கு போட்டோ இரண்டையும் தனித்தனியே பிரித்து தந்துவிடும். அதை கொண்டு எளிதாக படங்களை அமைத்து விட முடியும்.

தளத்திற்கான சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். தோன்றும் விண்டோவில் Merge Profile & Cover Photo என்னும் தேர்வினை கிளிக் செய்யவும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் படத்தினை தேர்வு செய்து பின் Upload பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் படமானது தரவேற்றம் செய்யப்படும். இல்லையெனில் Cover Photo பொத்தானை அழுத்தி முகநூல் கணக்கினை உள்ளிட்டு நேரிடையாக கவர் போட்டோவினை தெரிவு செய்து கொள்ளவும் முடியும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் Done பொத்தானை அழுத்தவும். பின் படங்களை தரவிறக்க சுட்டி கிடைக்கும். அதற்கு முன்னர் உங்களுடைய முகநூல் பயனர் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். 

பின் தோன்றும் விண்டோவில் அந்த தளத்திற்கான முகநூல் இசைவுவிருப்ப பொத்தானை கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் மட்டுமே தரவிறக்கம் செய்வதற்கான பொத்தான் முழுமையாக கிடைக்கும்.

பின் படங்களை பதிவிறக்கம் செய்து, முகநூல் கணக்கில் படங்களை அமைத்துக்கொள்ளவும்.

Friday, August 9, 2013

கணினி கலைச்சொற்கள்

தினமும் நாம் பயன்படுத்தும் கணினி சம்பந்தமான கலைச்சொற்களுக்கு விரிவுபெயர் தெரியாது. ஆனால் நாம் அதை வழக்கமாக பயன்படுத்துவோம் அவ்வாறு நாம் அதிகம் பயன்படுத்தும் கணினி சம்பந்தமான கலைசொற்கள். 



HTTP - Hyper Text Transfer Protocol.
HTTPS - Hyper Text Transfer Protocol Secure.
IP - Internet Protocol.
URL - Uniform Resource Locator.
USB - Universal Serial Bus.
VIRUS - Vital Information Resource Under Seized.
3G - 3rd Generation.
GSM - Global System for Mobile Communication.
CDMA - Code Divison Multiple Access.
UMTS - Universal Mobile Telecommunication System.
SIM - Subscriber Identity Module.
AVI = Audio Video Interleave
RTS = Real Time Streaming
SIS = Symbian OS Installer File
AMR = Adaptive Multi-Rate Codec
JAD = Java Application Descriptor
JAR = Java Archive
JAD = Java Application Descriptor
3GPP = 3rd Generation Partnership Project
3GP = 3rd Generation Project
MP3 = MPEG player lll
MP4 = MPEG-4 video file
AAC = Advanced Audio Coding
GIF = Graphic Interchangeable Format
JPEG = Joint Photographic Exper tGroup
BMP = Bitmap
SWF = Shock Wave Flash
WMV = Windows Media Video
WMA = Windows Media Audio
WAV = Waveform Audio
PNG = Portable Network Graphics
DOC = Document (Microsoft Corporation)
PDF = Portable Document Format
M3G = Mobile 3D Graphics
M4A = MPEG-4 Audio File
NTH = Nokia Theme (series 40)
THM = Themes (Sony Ericsson)
MMF = Synthetic Music Mobile Application File
NRT = Nokia Ringtone
XMF = Extensible Music File
WBMP = Wireless Bitmap Image
DVX = DivX Video
HTML = Hyper Text Markup Language
WML = Wireless Markup Language
CD - Compact Disk.
DVD - Digital Versatile Disk.
CRT - Cathode Ray Tube.
DAT - Digital Audio Tape.
DOS - Disk Operating System.
GUI - Graphical User Interface.
HTTP - Hyper Text Transfer Protocol.
IP - Internet Protocol.
ISP - Internet Service Provider.
TCP - Transmission Control Protocol.
UPS – Uninterruptible Power Supply.
HSDPA - High Speed Downlink Packet Access.
EDGE - Enhanced Data Rate for GSM[Global System for Mobile
Communication] Evolution.
VHF - Very High Frequency.
UHF - Ultra High Frequency.
GPRS - General Packet Radio Service.
WAP - Wireless Application Protocol.
TCP - Transmission Control Protocol .
ARPANET - Advanced Research Project Agency Network.
IBM - International Business Machines.
HP - Hewlett Packard.
AM/FM - Amplitude/ Frequency Modulation.
WLAN - Wireless Local Area Network

புகழ்பெற்ற ஐடி நிறுவனங்களுடைய பெயர்கள்

GOOGLE :- Global Organization Of Oriented Group Language of Earth
APPLE:- Asian Passenger Payload Experiment
HP :- Hewlett-Packard
IBM:- International Business Machines Corporation
HCL:-Hindustan Computer Limited
WIPRO:- Western India Product Limited
GE:-General Electronics
INFOSYS:-Information System
TCS:- Tata Consultancy Services
AOL:- American Online
BPL:- British Physical Laboratories
INTEL:- Integrated Electronics
CISCO:- Computer Information System Company
DELL:- Michael DELL
SONY:-Sound Of New York
AMD:- Advance micro devices
LENOVO:- LE(Legend),NOVO(New)
COMPAQ:- Compatibility And Quality

Wednesday, August 7, 2013

ஒரே கிளிக்கில் 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும். இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணைத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே  பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய மென்பொருள்களை தேர்வு செய்து பின் Get Installer பொத்தானை அழுத்தவும் பின் ஒரு பைல் பதிவிறக்கம் ஆகும்.  பின் பதிவிறக்கம் ஆன பைலை நிறுவவும் கணினியில் நிறுவும் போது இணைய இணைப்பு அவசியம் தேவை. இணைய வேகத்திற்கு ஏற்ப அனைத்து மென்பொருள்களும் நிறுவப்பட்டு விடும்.

பின் அந்த மென்பொருள்களை வழக்கம் போல் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மென்பொருள்களின் புதிய பதிப்பு வெளிவரும் போது அதனை அப்டேட் செய்து கொள்ளவும் முடியும்.

Corrupt ஆன File களை சரி செய்வதற்க்கான மென்பொருள்

உங்கள் computer ல் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் சில files சில வேளைகளில் திடீர்ப் பிரச்சினையால் பளுதடயவோ - சேதமடயவோ ஏற்படலாம்.. அதற்கு பின்வரும் காரணங்கள் மிக முக்கியமானவை..


1. Network interruption 
2.Network Sharing ன் போது திடீர் என ஏற்படும் மின்தடை
3. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்தல் (high power)
4. வைரஸ் பாதிப்பு (virus infection)

இது போன்ற காரணங்களால் உங்கள் file corrupt ஆகும். அப்படியானால் அந்த file ஐ மீண்டு அதே நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு software உள்ளது.அதன் பெயர் : பைல் ரிப்பேர் ( File Repair)


இம் மென்பொருளைப் பயன்படுத்தி என்னென்ன வகை கோப்புகளை ரிப்பேர் செய்யலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)

  • corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
  • corrupted Zip or RAR archives (.zip, .rar)
  • corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
  • corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
  • corrupted PDF documents (.pdf)
  • corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
  • corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
  • corrupted music (.mp3, .wav)


கீழ் காணப்படும் விதமாக நீங்கள் file ஐ open செய்யும் போது தோன்றினால் உங்கள் file corrupt ஆகிவிட்டது என அர்த்தம் அதையும் வாசித்துப் பாருங்க

  1. File is not in a recognizable format
  2. Unable to read file
  3. File cannot be accessed
  4. Application cannot open the type of file represented by filename
  5. Out of memory errors, or low system resources errors
இப்படி message வந்தால் உங்கள் file corrupt ஆகிவிட்டது என அர்த்தம்.அப்படியான file களை இந்த software மூலம் சரி செய்யலாம்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி: Download File Repair software

Tuesday, August 6, 2013

10Gbps வேகத்தில் தரவுகளைக் கடத்தும் புதிய USB இணைப்பான் உருவாக்கம்

தற்போது கணனியை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்தப்படும் அனைத்து சாதனங்களும் USB இணைப்பானைக் கொண்டே பொருத்தப்படுகின்றன.
தற்போது பாவனையில் இருப்பது USB 2.0, USB 3.0 போன்ற இணைப்பான்கள் ஆகும்.

எனினும் இதனை அறிமுகப்படுத்திய குழு தற்போது 10Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடிய USB 3.1 இணைப்பானை உருவாக்கியுள்ளனர்.

இம்மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இணைப்பான் ஆனது, தற்போது உள்ளவற்றினை விடவும் 2 மடங்கு வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யவல்லன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கலர் போட்டோவை பென்சில் வரைவாக மாற்ற எழிய மென்பொருள்

ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் தாமாக தம்மை வரைந்து போட்டோ வாக மாற்றி upload பண்ணுவாங்க என்ன மாதிரி ஓவியம்னாலே என்னன்னு தெரியாத பக்கிக்கு எல்லாம் எப்படி pencil sketch போடலாம்னு ஜோசிச்சிருக்கும் போது ஒருத்தர் photo to sketch 3.2 என்ற மென்பொருள் பற்றி சொன்னாரு.. அத என் கணனில நிறுவினேன் ... ஹா அவளவு தான் நானும் ஓவியன் ஆகிட்டேன்..

இந்த மென்பொருளில் pen sketch, pencil sketch மற்றும் brush sketch ஆகிய பார்மட்களில் உங்களுடைய போட்டோக்களை convert செய்துகொள்ளலாம்.

எளிமையான படிமுறைகளில் எந்த ஒரு மென்பொருள் அனுபவமும் இன்றி நீங்களாகவே இதைச் செய்து முடிக்கலாம்.

Photo to Sketch மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய :http://www.thinkersoftware.com/photo-to-sketch/index2.htm

முகவரிக்குச் செல்லவும்.

Monday, August 5, 2013

போட்டோக்களைக் காப்பாற்ற புதிய தளம்

மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இந்நாட்களில், நாம் அதிகமான எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஹார்ட் டிஸ்க் இடம் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஹார்ட் டிஸ்க் திடீரென இயங்காமல் போனால், இந்த போட்டோக்கள் கிடைக்காது. இதற்கான ஒரு தீர்வாக, பல இணைய தளங்கள், க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்திட டிஸ்க் இடம் தருகின்றன. அந்த வகையில் அண்மையில் பார்த்த ஓர் இணைய தளம் picturelife. இதன் முகவரிhttps://picturelife.com/ இந்த தளத்தில் நம் போட்டோக்களைப் பத்திரமாக பதிந்து வைக்கலாம்.
இந்த தளத்தில் நுழைந்து, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் மின் அஞ்சல் முகவரியினையும், அதற்கான பாஸ்வேர்டையும் கொடுத்து அக்கவுண்ட் தொடங்கவும். அடுத்து Continue மற்றும் Next Step பட்டன்களைக் கிளிக் செய்திடவும். உடனே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோக்களை பேக் அப் செய்திடும் வேலைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். Start Backing Up Your Photographs என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்தவுடன், ஒரு செட் அப் பைல் டவுண்லோட் ஆகும். இதனை இயக்கி, படங்களை ஒருங்கிணைக்கும் Picturelife Sync அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். 
இது செயல்படத் தொடங்கியவுடன், உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்து, நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை, உறுதி செய்வதற்காகக் கொடுத்து, எந்த பதிப்பினை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தளம் இலவசமாக 5 ஜிபி வரையிலான பைல் சேவ் செய்திட இடம் தருகிறது. இந்த இடத்தைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 2,000 போட்டோக்களை சேவ் செய்து வைத்திடலாம். எந்த பதிப்பு எனத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் போட்டோக்கள் மற்றும் படங்கள் உள்ள போல்டரைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டால், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பிக்சர் லைப் தளத்தில் சேவ் செய்யப்படும். அனைத்தும் முடிந்த பின்னரும், நீங்கள் பிக்சர் லைப் தளம் சென்று, உங்கள் போட்டோக்களை ஆல்பங்களாகப் பிரிக்கலாம். நீங்களாகவே, போட்டோக்களை இதன் பின்னர் அப்லோட் செய்திடலாம். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இந்த தளம் தனியே இதற்கென சப்போர்ட் பக்கம் ஒன்றை இயக்குகிறது. 
பல நூறு, ஏன் ஆயிரக்கணக்கான நம் போட்டோக்களைப் பத்திரமாகப் பதிந்து வைத்து, நம் வாழ்நாளின் பிற்காலத்திலும், நம் சந்ததியினரும் பார்த்து ரசிப்பது, வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். எனவே, இதுவரை இது போன்ற தளம் எதனையும் பயன்படுத்தாதவர்களும், பிறவற்றைப் பயன்படுத்தி வருபவர்களும் இதனைப் பார்க்கலாம்.