Wednesday, August 31, 2011

ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு அதிசயம்!



கண்ணுக்கெட்டும் உயரம் வரை, கட்டடங்களை கட்டி, உலக நாடுகளை பிரமிக்க வைப்பதில், வளைகுடா நாட்டுக்காரர்களை, யாராலும் மிஞ்ச முடியாது. சில ஆண்டுகளுக்கு முன், துபாயில் புர்ஜ் கலிஜியா என்ற, 828 மீட்டர் உயரமுள்ள, மிகப் பெரிய கட்டடத்தை கட்டி, அசத்தினர். உலகின் மிக உயரமான சொர்க்கம் என, இந்த கட்டடம் வர்ணிக்கப்படுகிறது.
இப்போது, இதை மிஞ்சும் வகையில், மற்றுமொரு பிரமாண்டமான பாலைவன சொர்க்கம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் <உருவாகப் போகிறது. இந்த புதிய கட்டடத்துக்கு, "கிங்டம் டவர்' என, பெயரிடப்பட்டுள்ளது. இதன் உயரம் என்ன தெரியுமா... 1,000 மீட்டர். இந்த கட்டடத்தின் உச்சிக்கு, "லிப்ட்'டில் பயணித்தாலும், 12 நிமிடங்கள் ஆகும்.
இந்த பிரமாண்ட கட்டடத்தில், நான்கு ஆடம்பர சொகுசு ஓட்டல்கள், அபார்ட்மென்ட்கள் மற்றும் உச்சியில் இருந்து, ஜெட்டா நகரத்தின் அழகை ரசிக்கும் வகையிலான, கண்காணிப்பு கோபுரம் ஆகியவையும் அமையவுள்ளன.
இதற்காக, 5,400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது துவங்கி விட்டாலும், முற்றிலும் முடிவடைய, ஐந்து ஆண்டுகள் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் தான், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளப் போகிறது. "கட்டடத்தின் உயரம், 1,000 மீட்டர் என, தற்போது ஒரு மதிப்பீட்டுக்காக கூறியுள்ளோம். ஆனால், உயரம் பற்றிய விஷயங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன், உங்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது...' எனக் கூறி, பிரமிக்க வைக்கின்றனர், சவுதிக்காரர்கள்.

Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்


வரலாற்றில் கண்டிராத பாரிய இரகசியக் காப்பு மாற்றத்தினைச் Facebook உருவாக்கியுள்ளது.

இதன் ஆரம்பகட்டமாக ஒருவர் யாருடன் படங்களைப் பகிர்ந்து கொள்கின்றார் என்பதும் update களின் நிலைமை மற்றும் இட அமைப்புக்கள் என்பனவும் கூடுதலானளவில் தெளிவுபடுத்தப்படுகின்றன.

நீங்கள் யாருடன் படங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றீர்களோ அதை இலகுவாக்கவே விரும்புகின்றோம் என்கின்றது Facebook. ஒரு டசினுக்கும் மேலே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை எல்லாமே முக்கியமாக இரு பகுதிகளில்தான் இடம்பெற்றுள்ளன.

ஒன்று, பயனாளர்கள் கணக்குகளில் இரகசியப் பாதுகாப்பு மாற்றங்களைச் செய்கின்றது. மற்றையது, பயனாளர்கள் எவ்வாறு தமது உள்ளடக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்பதில் செய்கின்றது.

தற்போது இந்த profile கட்டுப்பாடுகள் பக்கத்தின் வலதுபக்கத்தில் தடித்த எழுத்துக்களில் காணப்படும்.

கடந்த காலங்களில் ஒருவர் உங்களது படங்களை அல்லது இசைகளை Privacy Settings பக்கத்தினூடாகச் சென்றே பார்க்கமுடியும்.

தற்போது இந்தச் சரி செய்தல்கள் எல்லாம் ஒவ்வொரு பயனாளர் பக்கத்திலும் நீங்கள் உங்களது திருத்தங்களைச் செய்யும்போது வலது பக்கத்தில் தோன்றும்.

View Profile As எனும் அமைப்பையும் Facebook தனது பக்கத்தில் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.

இது உங்களது நண்பர் ஒருவர் உங்களது பக்கத்தைப் பார்க்கும்போது எப்படியிருக்குமோ அவ்வாறே உங்களையும் பார்க்க விடுகின்றது.

ஆனால், இது நீங்கள் ஒவ்வொரு தடவையும் உங்களது பக்கத்திற்குள் செல்லும்போதும் வலதுபக்க மேல் மூலையில் தோன்றும்.

தற்போது பயனாளர்களால் யாராவது தம்மைப் பார்க்கமுன்னரே ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ முடிகின்றது. இது படங்கள், இடங்கள் மற்றும் விளம்பரங்களையும் உள்ளடக்குகின்றது.

தற்போது நீங்கள் ஒரு Facebook நண்பர் அல்லாமல் இருந்தாலும் கூட யாரையுமே இணைத்துக் கொள்ளலாம். இது இன்னும் பலரை இணைத்துக் கொள்ளச் சந்தர்ப்பமளிக்கின்றது.

ஒருவருடன் ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதானது அவர் Facebook நண்பராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை Facebook கூறுகின்றது.

Publisher சட்டத்தில் இடங்களையும் நேரடியாக இணைக்கலாம். உலாவியிலிருந்து அல்லது கைத்தொலைபேசி மென்பொருட்களிலிருந்து நீங்கள் ஓர் இடத்தைக் குறிக்கலாம்.

இத்துடன் GPS இல் குறிக்கமுடியாத குறுகிய தூரங்களிலுள்ள இடங்களின் அமைவிடத்தினையும் இதன்மூலம் குறிக்கலாம்.

இதன் விளைவாக, iOS மற்றும் Android பிரயோகங்களிற்கான ஐகொன்கள் இங்கு அவசியமில்லாமல் போவதால் இவை அகற்றப்பட்டுவிட்டன.

அதற்குரிய இடத்தில் புதிதாக Nearby எனும் ஐகொன் காணப்படுகின்றது. அத்துடன் பயனாளர்களால் பட அல்பங்களிற்கு அல்லது தனிநபர்ப் படங்களுக்கு அல்லது வீடியோக்களுக்கும் இடங்களைக் குறிக்கமுடியும்.

Everyone எனும் தெரிவும் Public என வித்தியாசங்காண்பதற்காக மாற்றப்பட்டுள்ளது.

கடைசி மாற்றமாக ஒருவர் தன்னை Facebook உள்ளடக்கத்திலிருந்து அகற்ற முயலும்போதும் அதிக தெரிவுகளை வழங்குகின்றது. இதில் 3 தெரிவுகள் காணப்படுகின்றன.

ஒன்று, உங்களது படத்தினை அகற்றலாம், இரண்டு படத்தை ஏற்றியவரை அப்படத்தை அகற்றுமாறு வேண்டலாம், மூன்று அந்நபரை Facebook இலிருந்து தடுக்கலாம்.

இரகசியக் காப்புத் தன்மைக்காக விமர்சிக்கப்பட்ட செயல்களுக்குப் பதிலாகவே இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவெனக் கூறலாம். இம்மாற்றங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என்றே கூறலாம்.

குப்பையை மீள்சுழற்சி செய்யும் புதிய இயந்திரம்


கடந்த வருடங்களில் மீள்சுழற்சி விதிமுறைகளை ஒவ்வொரு வீடுவீடாகக் சென்று கூறிவந்தனர்.

ஆனால் தற்போது ஒருவர் தனது வீட்டிலேயே தரம்பிரிக்கத் தேவையில்லை. புதிய வகையான கழிவுத் தொழிற்சாலை உங்களைச் சிரமப்படவேண்டாம் என்கின்றது.

கழிவுகள் சேகரிக்கப்பட்ட பின்னர் உள்ளுர் கழிவிடங்களிலேயே Magpie இயந்திரத் தொகுதியால் இவை தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன.

இது மீள்சுழற்சியை இலகுவாக்குவதுடன் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றது. இது வீதிகளிலுள்ள பலதரப்பட்ட குப்பைக்கூடைகளையும் கூடக் குறைக்கின்றது.

ஒரு பகுதிக்குள்ளால் குப்பைகள் செல்லும்போது கட்புலாச் சிவப்புக் கதிர்களால் இவற்றின் மூலக்கூறுகள் பரிசோதிக்கப்பட்டு Magpie இன் மூளைக்குத் தரப்படுகின்றது. இதன்பின்னர் அது எந்தவகைக் கழிவெனத் தரம்பிரிக்கப்படுகின்றது.

தண்ணீர் அடைக்கப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களாயின் வேறாகவும் பொதிசெய்யப் பயன்படும் பிளாஸ்ரிக்குகள் வேறாகவும் பிரிக்கப்படும்.

இவற்றின் அளவுகளைக் கணக்கிட்டு அவற்றை அது உடனடியாகவே மீள்சுழற்சிப்படுத்துகின்றது. மணிக்கு 5 தொன்களை இது மீள்சுழற்சியாக்குகின்றது.

ஒக்ரோபர் 1 இலிருந்து இது பிரித்தானியாவின் பேர்க்ஷயரின் பட்வேர்த் பகுதியில் முதன்முதலில் ஆரம்பித்துவைக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. அதன்பின்னர் படிப்படியாக இவை ஏனைய இடங்களிலும் செயற்படுத்தப்படும்.

பிளாஸ்ரிக்கில் 1 வீதத்தினை நாங்கள் மீள்சுழற்சி செய்கின்றோம் என்றால் எங்களால் 300,000 தொன் காபனீரொட்சைட்டையும் வெளிவருவதையும் தடுக்கமுடியும்.

இது லண்டனில் இருந்து சிட்னிக்கு 150 தடவைகள் விமானத்தில் சென்று திரும்பும் பயணத்தை ஒத்ததாகும் என்கின்றனர் இதனைத் தயாரித்த Veolia Environment Services நிறுவனம்.

Tuesday, August 30, 2011

அதென்ன ? S.M.S 2.0


மொபைல் வைத்திருப்பவர்கள் அடுத்தவர்களிடம் போனில் பேசுவதை விட குறுஞ்செய்தி என்று சொல்லப்படுகிற எஸ்.எம்.எஸ் அனுப்புவது தான் மிக அதிகமாக உள்ளது.காரணம் அந்தளவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது மொபைல் உபயோகிப்பாளர்களிடம் பிரபலமாக உள்ளது.
நாம் பிசியான நேரங்களில் இருப்பதை நம்மை தொடர்பு கொள்பவருக்கு நாசுக்காக தெரிவிக்க இந்த குறுஞ் செய்தி சேவை உதவி செய்கிறது.

சில பேர்களிடம் நேரில் தெரிவிக்க முடியாத பல விஷயங்களை மொபைல் மூலம் தெரிவிக்க இந்த எஸ்.எம்.எஸ் சேவை உதவுகிறது. குறிப்பாக காதலிப்பவர்கள் மொபைலில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் மூலமாக பேசிக்கொள்வதுதான் மிகமிக அதிகம்.இதற்கு காரணம் வேறு சொல்ல வேண்டுமா என்ன?

இப்படி மனித வாழ்க்கையில் கூடவே வரும், மௌனமாய் சாகசம் செய்யும் ஒருமனிதனைப் போல நம்மை பின் தொடர்வதுதான் மொபைல் எஸ்.எம்.எஸ் சேவை.அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் அனுபவத்தை நாம் இன்னும் புதுமையாக மேற்கொள்ள உதவுவது தான் Affle Limited நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் S.M.S 2.0

அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்.

குறைந்தபட்சம் ஜி.பி.ஆர்.எஸ் வசதி கொண்ட கலர் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த அப்ளிகேஷன் ஒரு புதுமையான எஸ்.எம்.எஸ் அனுப்பும் அனுபவத்தை தரும் என்றால் அது மிகையாகாது. காரணம் பொதுவாக நாம் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்போது மிகவும் சாதாரணமாக லெட்டர்களை மட்டுமே டைப் செய்து அனுப்புவோம்.ஆனால் இந்த அப்ளிகேஷனை நாம் நமது மொபைலில் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்கண்ட வசதிகளை பெறலாம்.

1. லெட்டர்களை (TEXT) கலரில் டைப் செய்து அனுப்பலாம்.

2. உங்கள் குறுஞ்செய்தியை பெறுபவரின் மூடுக்கேற்ற மாதிரியான, அல்லது நீங்கள் அனுப்பும் செய்தியின் தன்மைக்கேற்ற 'Smileys' களை இணைத்து அனுப்பலாம்.

3. ஒவ்வொரு முறையும் குறுஞ்செய்தி அனுப்பும்போது அதன் பின்பக்கத்தின் வண்ணத்தை (BACKGROUND COLOUR) மாற்றி அனுப்பலாம்.

4. நீங்கள் நினைக்கும் நேரத்தில் தானாக எஸ்.எம்.எஸ் செல்லும்படி செட் செய்து அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.அதேபோல உங்கள் குறுஞ்செய்தியை இமெயிலாக மாற்றி அனுப்பலாம்.

5. இதில் இருக்கும் ஸர்ச் (SEARCH) வசதி மூலம் நாம் இணைய தேடல்,நீங்கள் வைத்திருக்கும் ஆபரேட்டர் தரும் வசதிகளை தேடும் வசதி,நகரத்தை தேடும் வசதி,வேலை தேடுதல்,வீட்டுமனை தேடுதல் போன்ற சேவைகளை மேற் கொள்ள முடியும்.

பின்குறிப்பு : இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசம் தான். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் லைவ் போர்ட்டலுக்கு சென்று அங்கேயும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நோக்கியா, சோனிஎரிக்சன்,சாம்சங் கம்பெனிகளின் பெரும்பாலான மாடல்களை இந்த அப்ளிகேஷன் ஆதரிக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் எஸ்.எம்.எஸ் பக்கத்திரையில் சினிமா, விளையாட்டு,அரசியல்,கல்வி,பேஷன்,வணிகம் சம்பந்தமான அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக படித்து மகிழலாம்.

மொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்!

நாம வாங்குற மொபைல்ல மிகமிக முக்கியமான பிரச்சனையே அதோட ‘பேட்டரிதிறன்’ தான். நாம
எப்படி நம்ம மொபைலை யூஸ் பண்ணுறமோ அதை வெச்சி தான் நம்ம மொபைலோட பேட்டரியோட ஆயுள்காலம் இருக்கு.சரி இங்க மொபைலில் பேட்டரியை எப்படி பயன்படுத்தினால் அது ரொம்ப நாளைக்கு உழைக்கும்கிறதை பார்க்கலாம்.

+ நீங்க கடையிலே போயி புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க 2” அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம். இந்த ‘அளவுகுறியீடு’ பேட்டரியோட பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான் நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ பாக்குறது,கேம்ஸ் விளையாடுறது.வை-பை மூலமா இன்டர்நெட் கனக்ட் பண்ணி பாக்குறதுன்னு மொபைல்ல இருக்குற எல்லா வசதிகளையும் ரொம்ப நேரம் பயன்படுத்த முடியும்.

+ இப்படி புதுசா வாங்குற மொபைலை வாங்குன உடனே சிம்மை போட்டு பயன்படுத்த கூடாது.மொதல்ல மொபைலை ஆப் பண்ணிட்டு 8 மணி நேரம் சார்ஜ் ஏத்தனும். ஒரு ரெண்டுமணி நேரம் ஆன உடனே உங்க மொபைல்ல ‘பேட்டரி புல்’லுன்னு காட்டும்.அப்படி காட்டினாலும் நீங்க நிப்பாட்டிடாதீங்க புதுபோனுக்கு முதல் தடவை சார்ஜ் ஏத்துறப்போ கண்டிப்பா 8 மணி நேரம் ஏத்தனும்.

+ அடுத்தடுத்த முறை நீங்க சார்ஜ் ஏத்தும் போது ‘பேட்டரி புல்’லுன்னு காட்டினா உடனே சார்ஜ் ஏத்துறதை நிப்பாட்டிடனும்.இல்லேன்னா பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காது.

+ உங்க மொபைல்ல எந்த நேரமும் ப்ளுடூத்தை ஆன் பண்ணி வைக்காதீங்க,இதனால உங்க பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிடும்.

+ அதேமாதிரி ‘வை-பை’யையும் எந்த நேரமும் ஆன் பண்ணி வைக்க கூடாது.

+ உங்க மொபைலோட திரைவெளிச்சத்தோட(screen brighness) அளவை மொபைல்ல முன்னிருப்பா (default) என்ன அளவுல இருக்கோ அந்த அளவுலேயே வெச்சிருங்க. வெளிச்சத்தை அதிகப்படுத்தினாலும் சீக்கிரம் பேட்டரி தீர்ந்து போயிடும்.

+ மொபைல்ல பேட்டரியோட அளவு முழுசா தீர்ந்த பொறவு தான் நீங்க சார்ஜ் ஏத்தனும். பாதி,இல்லேன்னா கால்வாசி அளவுல இருக்கும் போது சார்ஜ் ஏத்தக் கூடாது.இதனாலேயும் பேட்டரி ரொம்ப நாளைக்கு உழைக்காம போயிடும்.

+ மொபைலோட திரையில் வீடியோ ரிங்டோன்,லைவ் வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர், அதிக பிக்சல் உள்ள புகைப்படங்கள் இவற்றை எல்லாம் பயன்படுத்தக் கூடாது அப்படி பண்ணினாலும் சார்ஜ் சீக்கிரமே தீர்ந்து போயிடும்.

+ நாம ஒவ்வொருத்தரும் புதுசுபுதுசா ரிங்டோன் வெச்சிக்க ஆசைப்பட்டு விதவிதமா MP3 பாடல்களை ரிங்டோனா வெச்சிருப்போம்.இதனாலேயும் சார்ஜ் சீக்கிரம் போயிடும்.அப்படி வெச்சாலும் கூட அரை அல்லது ஒருநிமிஷத்துக்கு கட் பண்ணின பாடல்களை மட்டும் ரிங்டோனா வெச்சிக்கங்க, ஒருமுழு பாடலை ரிங்டோனா வைக்க வேணாம்.

+ எப்ப பாத்தாலும் மொபைலை ‘சைலன்ட்’ல வெக்காதீங்க,அதேமாதிரி ரிங்டோன் ஒலியோட அளவையும் குறைச்சி வையுங்க.

+ நம்மல்ல நெறைய பேர் நைட்டு தூங்கப்போறப்போ மொபைலை சார்ஜ்ல போட்டுட்டு மறுநாள் தூங்கி எந்திருக்கும் போதுதான் அதை பிளக்ல இருந்து எடுப்போம் இது ரொம்ப ரொம்ப தப்பு இப்படி பண்ணினா வெகு சீக்கிரத்துல பேட்டரி சூடாகி உப்பி போயி வேலை செய்யாம போயிடும்.

+ இன்டர்நெட் யூஸ் பண்ணுற நேரம்,மெயில் செக் பண்ணுற நேரம் போக மத்த நேரங்கள்ல மொபைல்ல இன்டர்நெட் உபயோகத்தை நிப்பாட்டி வையுங்க.இதன் மூலமாவும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போகும்.

+ அதிக வெப்பமுள்ள இடங்கள்ல பேட்டரியை வைக்க வேணாம்,அடிக்கடி மொபைல்ல பேட்டரியை கழட்டி கழட்டி மாட்டக்கூடாது.

+ கூடுமானவரைக்கும் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் விக்குற ஒரிஜினல் பேட்டரிகளை மட்டுமே மொபைல்ல யூஸ் பண்ணுங்க.காசுக்கு ஆசைப்பட்டு எந்த காரணத்தை கொண்டும் போலி யான அதேமாதிரி சார்ஜரும் ஒரிஜினலை தான் யூஸ் பண்ணனும்.இப்படிப்பட்ட சின்னசின்ன விஷயங்கள்ல கவனமா இருந்தாலே போதும்.உங்க மொபைலோட பேட்டரி நீண்ட நாட்களுக்கு நல்லா உழைக்கும்.

மொபைலுக்கான இலவச எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன்கள்!


நாம் மொபைல் போன் உபயோகிக்க ஆரம்பித்த காலம் தொட்டு போனில் பேசுவதை விட எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத் தான் பெரிதும் விரும்புகிறோம்.

'மௌனத்தை விட இந்த உலகில் மிகச்சிறந்த மொழி
வேறேதும் இல்லை' என்று சொல்வார்கள். இது எஸ்.எம்.எஸ் க்கு மிகவும் அழகாக பொருந்திப் போகிறது.காரணம் நாம் மொபைலில் பேசித் தீர்க்க முடியாத சில விஷயங்களை எஸ்.எம்.எஸ் மூலமாக பேசி தீர்த்து விடுவோம்.

எஸ்.எம்.எஸ் கூட நாம் மற்றவர்களிடம் மௌனமாய் பேசுவதைப் போல ஒரு மொழிதான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் சேவைக்கு மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ்,ஒரு நாளைக்கு நூறு எஸ்.எம்.எஸ் இலவசம்,ஒரு பைசாவுக்கு எஸ்.எம்.எஸ் என்று பல சலுகைகளை வழங்கி வருகிறார்கள்.

இதை சலுகைகள் என்று சொல்வதை விட மறைமுகக் கொள்ளை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் மொபைல்சேவை தரும் நிறுவனங்கள் லாபம் இல்லாமல் எந்த சலுகைகளையும் நமக்கு தர மாட்டார்கள்.

அதனால் மொபைலும் உபயோகிக்க வேண்டும்.அதேநேரம் நமது மொபைலில் இருந்தே இலவசமாக மற்றவர்களுக்கு 'எஸ்.எம்.எஸ்'சும் அனுப்ப வேண்டும் இதற்கு சில நிறுவனங்கள் இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் கூடவே மொபைலுக்கான அப்ளிகேஷன்களையும் நமக்கு தருகின்றன.

அவைகளை இங்கே உங்களுக்காக தொகுத்து தருகிறேன்.

+ www.160by2.com பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படும் முதல் இடத்தில் இருக்கும் இலவச எஸ்.எம்.எஸ் இணையதளம் இதுதான். இந்த இணையதளத்தில் இந்தியா மட்டுமல்லாது குவைத், சிங்கப்பூர்,மலேசியா,
யு.ஏ.இ என வெளிநாடுகளில் உள்ள மொபைல்களுக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.

இந்த இணையதளம் மொபைலுக்காகவே பிரத்யேகமாக தரும் அப்ளிகேஷனை நமது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டால் கணினி இல்லாமலேயே நமது மொபைலிலிருந்தே மற்றவர்களுக்கு இலவசமாக அனுப்பிக்
கொள்ளலாம்.இது ஜாவா வகையை சார்ந்த அப்ளிகேஷன் என்பதால் நோக்கியா,சாம்சங்,சோனிஎரிக்சன்,எல்.ஜி,மோட்டோரோலா என பெரும்பாலான கம்பெனிகளின் மொபைல்களுக்கு இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஓ.எஸ் கொண்ட மொபைல்களுக்கும் அதன் மார்க்கெட்டுகளில் தனி அப்ளிகேஷனாக கிடைக்கிறது.

இந்த அப்ளிகேஷன் நமது மொபைலின் போன்புக்கில் உள்ள நம்பர்களை தானாகவே இணைத்துக் கொள்வதால் நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புவது இன்னும் எளிமையாகிறது.இதன் ஒரேகுறை 80 எழுத்துகளில் மட்டுமே எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

+ www.way2sms.com இந்த இணையதளமும் கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்புபவர்களின் பேவரைட் இணையதளம்.கணினி மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப தினமும் 26 லட்சம் பேர்கள் இந்த தளத்தை பயன்படுத்துகிறார்கள்.160 எழுத்துகள் வரை நாம் எஸ்.எம்.எஸ் டைப் செய்து அனுப்ப முடியும்.

மொபைலுக்கான பிரத்யேகமான அப்ளிகேஷனை இவர்கள் இன்னும் தரவில்லை என்றாலும் நமது மொபைலின் பிரௌசரில் http://m.way2sms.com என்று டைப் செய்து இந்த இணையதளம் மூலம் நாம் மற்றவர்களுக்கு அளவற்ற இலவச எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும்.இங்கு வெளிநாடுகளுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி இல்லை.கூடுதல் சேவையாக நமது இ-மெயில் களை மொபைலில் படித்துக் கொள்ளும் வசதியையும் தருகிறார்கள்.

+ www.jaxtr.com 120 எழுத்துகளை மட்டுமே டைப் செய்து மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ள முடியும்.மூன்று கட்டண திட்டங்கள் உண்டு அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் குறைந்த கால்கட்டணங்களில் வெளிநாடுகளுக்கு பேசிக்கொள்ளவும்,இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளவும் முடியும்.இதில் இருக்கும் free connect மூலம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐ-போன்,ஆன்ட்ராய்டு ஆகிய ஒ.எஸ் மொபைல் களுக்கு பிரத்யேகமாக அப்ளிகேஷனும் உண்டு.

+ www.mysmsindia.com way2sms இணையதளம் போல் உள்ளது. இந்தியாவுக்குள் எந்த மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.
தனியாக மொபைலில் பயன்படுத்த அப்ளிகேஷன் இல்லை.

+ www.mycantos.com 300 எழுத்துகள் வரை சப்போர்ட் செய்கிறது.மொபைலில் பயன்படுத்த தனி அப்ளிகேஷன் இல்லை.

+ www.sms440.com மிக நீளமான எஸ்.எம்.எஸ் அனுப்ப உதவும் இணையதளம் இதுதான்.இணையதளத்தின் பெயரைப் போலவே கிட்டத்தட்ட 440 எழுத்து களை டைப் செய்து அனுப்பலாம்.மொபைலுக்கான தனி அப்ளிகேஷன் இல்லை.

+ www.ibibo.com http://m.ibibo.com முகவரி மூலம் உங்கள் மொபைலில் இலவச எஸ்.எம்.எஸ் சேவையைபயன்படுத்தலாம்.மெயில்,போட்டோஸ்,மியூசிக்,
கேம்ஸ் என பல சேவைகள் இதில் உண்டு.

+ www.mobiyard.com மொபைலுக்கான பிரத்யேகமான எஸ்.எம்.எஸ் அப்ளிகேஷன் இது. ஜாவா வகை என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போன்களை இது ஆதரிக்கிறது.இலவச எஸ்.எம்.எஸ் சேவையுடன் இன்ஸ்டன்ட் மெசஞ்ஜர்,கேமிங் போர்டல் என இதர சேவைகளும் உண்டு.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

+ www.skebby.com இந்த அப்ளிகேஷனை மொபைலில் பயன்படுத்தும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொள்ளலாம்.பிளாக்பெர்ரி,ஐபோன்,ஆன்ட்ராய்டு,சிம்பியன்,ஜாவா,
விண்டோஸ் ஒ.எஸ் என எல்லா வகை ஒ.எஸ் மொபைல்களுக்கும் தனி அப்ளிகேஷனாக பயன்படுத்தலாம்.இலவசம் என்று சொன்னாலும் சேவையை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கிறார்கள்.அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க.

Saturday, August 27, 2011

சீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret codes for all china mobiles


இன்று மொபைல் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீன மொபைல்கள். டூப்ளிகேட் செய்வதில் வல்லவர்களான சீனர்கள் பிரபல கம்பெனிகளின் மொபைல்கள் போன்று அச்சு அசலாக உருவாக்கி பத்து மடங்கு விலை குறைவாக கொடுப்பதால் அனைவரும் அது போன்ற போன்களை உபயோகபடுதுகின்றனர். சாதரணமாக குறைந்தது Rs.1000/- ஒரு போன் வாங்கினால் கூட Dual Simcard, Blue tooth, Camera, Audio video players போன்ற அனைத்து வசதிகளையும் கொடுத்து விடுகின்றனர். Tv, 4 Simcard specility இப்படி ஏராளமான வசதிகளை வழங்குவதால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் இந்த வகை போன்களையே நாடி செல்கின்றனர்.
இந்திய மொபைல் வர்த்தகம் பெரும் பாதிப்படைந்துள்ளது. இன்னும் எவ்வளவோ துறைகளில் சீனா காலை பதித்து விட்டது. சீன விட நாங்க பெரிய ஆளு எங்க கிட்டயும் அது இருக்கு இது இருக்குன்னு வாய் வார்த்தையில் மட்டுமே சொல்லி கொண்டிருக்கையில் சீனா காரன் கிட்ட நம்ம இந்திய வர்த்தகத்தை இழந்து கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்ப்படுதுமென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம் சீன மொபைல்களில் உபயோகிக்க கூடிய சில ரகசிய குறியீடுகளை கீழே கொடுத்துள்ளேன். உங்களுக்கு தேவையானதை இதன் மூலம் செய்து கொள்ளுங்கள்.


சீன மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள்:
Default user code: 1122, 3344, 1234, 5678
Engineer mode: *#110*01#
Factory mode: *#987#
Enable COM port: *#110*01# -> Device -> Set UART -> PS Config -> UART1/115200
Restore factory settings: *#987*99#
LCD contrast: *#369#
Software version: *#800#
Software version: *#900#
Set default language: *#0000# Send
Set English language: *#0044# Send
Set English language (new firmware): *#001# Send
GM208 (Chinese Nokea 6230+) engineering menu: *#66*#
Set Engineer Mode *888*888#
Set Engineer Mode *#3646633#
Set Engineer Mode ***503#
Codes to Change Screen Language:
Set Default Language : *#0000# + Send
Set Language to Russian: *#0007# + Send
Set Language to French: *#0033# + Send
Set Language to Spanish: *#0034# + Send
Set Language to Italian: *#0039# + Send
Set Language to English: *#0044# + Send
Set Language to German: *#0049# + Send
Set Language to Thai: *#0066# + Send
Set Language to Vietnamese: *#0084# + Send
Set Language to Arabic: *#0966# + Send
Codes for Reset Mobile Factory Settings
*#987*99#
*#77218114#
*#881188#
*#94267357#
*#9426*357#
*#19912006#
*#118811#
*#3646633#
*#6804#
டிஸ்கி: நண்பர்களே சீனா மொபைகளில் ஒவ்வொன்று ஒரு மாடலில் இருப்பதால் இது அனைத்து மொபைகளுக்கும் பொருந்தும் என உறுதியாக கூற முடியாது.

Friday, August 26, 2011

கூகுளின் இலவச மென்பொருட்களை ஒரே கிளிக்கில் டவுன்லோட் செய்ய



கூகுள் தளம் வாசகர்களுக்காக சில பயனுள்ள மென்பொருட்களை அளிக்கிறது. இந்த மென்பொருட்களை எவ்வாறு டவுன்லோட் செய்வது என பார்ப்போம். இந்த பட்டியலில் கூகுளின் மென்பெருட்கள் மட்டுமின்றி கூகுல் பரிந்துரை செய்யும் சில பயனுள்ள மென்பொருட்களும்(Firefox, Avast, Skype....) உள்ளன. இந்த மென்பொருட்களையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த Packல் 14 இலவச மென்பொருட்கள் உள்ளது. இதில் 6 மென்பொருட்கள் கூகிளின் மென்பொருட்களாகும். இதர மென்பொருட்கள் வேற்று நிறுவனங்களின் மென்பொருட்கள். விண்டோஸ் XP, Vista, 7 ஆகிய இயங்கு தளங்களில் இந்த மென்பொருளை நிறுவலாம்.
தேவையானதை டிக் செய்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் டிக் செய்த மென்பொருட்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும்.
பின்பு இன்ஸ்டால் செய்து நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதில் உள்ள மென்பொருட்கள் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம் கீழே பார்ப்போம்.

Google Chrome - இணையத்தில் உலவுவதர்க்காக கூகுள் உருவாக்கிய இணைய உலவி ஆகும். உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் உலவிகளில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

Google Earth - உலகின் எந்த இடத்தையும் எளிதாக சுற்றி பார்க்கலாம் அதுவும் நிஜத்தில் இருப்பது போல. மற்றும் இந்த தளத்தில் Hotels, tourist place, driving directories போன்ற வசதிகளும் உள்ளது.

Google Apps - கூகுளின் சேவைகளான ஜிமெயில்,காலெண்டர் போன்ற சேவைகளை நம் கணினியில் பயன்படுத்து கூகுள் உருவாக்கிய மென்பொருளாகும்.

Google Toolbar for Internet Explorer - IE உலவியில் பயன்படுத்த கூகுள் உருவாக்கிய மென்பொருள். இதன் மூலம் தேவையில்லாத popups உருவாவதை தடுக்கலாம், இணைய படிவங்களை நிரப்ப Auto fill வசதியும் உள்ளது.

Spyware Doctor with Antivirus- கணினியில் உள்ள தீங்கிழைக்கும் Spyware, adware, trojans போன்றவற்றை நீக்கி கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ள.

Avast - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Immunet Protect Antivirus - கணினியை பாதுகாப்ப வைத்துக்கொள்ளும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருளாகும்.

Google Desktop - கூகுளின் இன்னொரு பயனுள்ள மென்பொருள் நம்முடைய டெஸ்க்டாப் விண்டோவில் சைட்பாரில் கூகுளின் வசதிகளை உபயோகிக்கும் வசதி.

Google Picasa - நம்முடைய போட்டோக்களை எடிட் செய்யவும், நண்பர்களுடன் பகிரவும் கூகுள் உருவாக்கிய மென்பொருள்.

Adobe Reader - இது பெரும்பாலும் நம் அனைவரும் கணினியிலும் இருக்கும் ஒரு மென்பொருளாகும். PDF பைல்களை நம் கணினியில் பார்க்க அடோப் நிறுவனம் உருவாக்கிய மென்பொருளாகும்.

Mozilla Firefox - மிகப்பிரபலமான இணைய உலாவியாகும். கூகுள் க்ரோம் இந்த உலவியை பின்னுக்கு தள்ளி தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


Google Talk - நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்க

Skype- குறைந்த விலையில் தொலைபேசி அழைப்பு பண்ணலாம்.

Real Player - வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் மீடியா பிளேயார்.

WebM for IE9 - IE உலவியில் இணைய வீடியோக்களை காண

மென்பொருட்களை டவுன்லோட் செய்ய- Google Pack

11 வகை பதார்த்தங்கள்: சமையலறையில் புதிய வரவு சூப்பர்செப்


கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட்டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயாராகி விடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ளது. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள்ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்திரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமையலறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

GPRS Settings ஐ இலகுவாக பெற்றுக்கொள்ள


ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்த கட்டனத்தில் Data சலுகைகளை நமக்கு வழங்கி வருகிறது. நாமும் பல வலையமைப்புக்கு (Mobitel, Airtel, Dialog, Hutch, Etisalat) அடிக்கடி மாறி மாறி வருகிறோம். இருந்தாலும் கையடக்க தொலைபேசியில் அந்த நிறுவனத்துடைய GPRS Settings இருந்தால் மாத்திரமே நாம் இணையத்தை பயன்படுத்த கூடியதாக இருக்கும். இந்த GPRS Settings ஐ எப்படி இலகுவாக பெற்றுக்கொள்வது எப்படி என்பதுதான் இன்றைய பதிவு.
GPRS Settings நமக்கு புதிதாக ஒரு Mobile வாங்கினால் / ஒரு வலையமைப்பில் இருந்து இன்னும் ஓர் வலையமைப்புக்கு மாறும் போது (Airtel இல் இருந்து Mobitel இற்கு மாறும் போது Mobitel உடைய GPRS Settings தேவைப்படலாம்) / தவறுதலாக GPRS Settings அழிக்கப்பட்டால் , போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு GPRS Settings தேவைப்படுகிறது.


இதனை பெறுவதற்கு வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பை மேற்கொண்டால் குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் போகும் அவர்கள் நமது அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அதற்கு பிறகு பெயர் , தொலைபேசி இலக்கம் , மொடல் நம்பர் சொல்லி எப்படியும் செட்டிங்ஸ் வருவதற்கு 15 நிமிடம் எடுக்கும்.இனிஇதையெல்லாம் விட்டுப்போட்டு கீழ் உள்ள முறையை பின்பற்றுங்க 3 செக்கனில் GPRS Settings கிடைத்துவிடும்.

Mobitel
Type #222#

Dialog
Type "GPRS" and send to 678 / Type #107#

Airtel

Type "ALL" and send to 2222

மேலே சொன்ன முறையில் GPRS Settings கிடைக்காவிட்டால் கீழ் உள்ள முறையை பின்பற்றுங்கள்.

Dialog , Mobitel, Etisalat , Airtel, Hutch போன்ற வலையமைப்புக்களுக்கு Manual settings ஐ பெறுவதற்கு http://settings.gprs.gishan.net

Aircel , Airtel , BSNL , DOCOMO,Reliance,Uninor,Vodafone போன்ற வலையமைப்புக்களுக்கு Manual settings ஐ பெறுவதற்கு http://nxwiki.blogspot.com

Sunday, August 21, 2011

மனித மூளையைப் போல் செயற்படும் புதிய கணினி சிப்





IBM நிறுவனம் மனித மூளையைப் போல் சுற்றுச்சூழலை விளங்கிச் செயற்படும், மற்றும் சிக்கலான விடயங்களை உணர்ந்துகொள்ளும் தன்மையுடன் ஒரு சிப்பினை உருவாக்கியுள்ளது.

கடந்த அரை நூற்றாண்டுகளாகக் கணினிகளை நிகழ்ச்சி நிரற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட சிப்களிற்குப் பதிலாக இந்தப் பரீட்சார்த்த சிப்பானது புதியதொரு கணினித் தலைமுறையை உருவாக்கப்போகின்றது. இவை ‘அறிவாற்றல் மிக்க கணினிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சிப்கள் SyNAPSE எனும் திட்டத்திற்குள் ஒரு படி முன்னேற்றகரமான செயற்பாடாக உருவாகியுள்ளது. போக்குவரவு வெளிச்சங்களில் தோற்றம், ஒலிகள், நுகர்வுகள் மற்றும் ஆபத்துக்களின் முன்னர் பாதுகாப்பற்ற நிலையை வெளிப்படுத்தவும் கூடிய தன்மை இருப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அல்லது தமது சூழலைப் புரிந்துகொண்டு செயற்படும் சேர்வர்கள், மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள் மற்றும் கைத்தொலைபேசிகளையும் கற்பனைசெய்து பாருங்கள்.

இவ்வருடம் அமெரிக்காவில் இடம்பெற்ற ‘Jeopardy’ புதிர்ப்போட்டியில் இரு மனிதர்களைத் தோற்கடித்த IBM கணினியான வற்சன் சுப்பர்கம்பியூட்டரைப் போல அதிவேகமானதாக இந்த சிப்களின் சக்தி இருக்காது.

இந்தச் சிப்பின் வேறு பயன்பாடுகளாக, உலகின் நீர் விநியோகத்தினை அதாவது வெப்பநிலை, அமுக்கம், அலை உயரம் மற்றும் ஒலியலைகள் போன்ற அளவுகளைக் கணித்து சுனாமி ஏற்படுமா இல்லையா என்பதைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யக்கூடிய கணிப்பினையும் கொண்டிருக்கும்.

அதேபோல ஒரு பலசரக்குக் கடைக்காரரிடம் இது இருந்தால் பொருட்களின் தோற்றம், மணம், வெப்பநிலை போன்றவற்றைக் கணித்து அவை பழுதாகிவிட்டன என்றும் கூறும்.

தற்போதுள்ள கணினிகள் கணக்கிடும் இயந்திரங்களாகவே உள்ளன என்று கூறும் இந்நிறுவனம் மனித மூளையைப் போல யோசிக்கும் அடுத்த கட்டத்திற்கு நாம் முன்னேறவேண்டும் என்கின்றது.

கணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.



கணினியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


கணினி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான் இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.
தறவிரக்க முகவரி http://download.cnet.com/Rapid-Typing-Tutor/3000-2051_4-10666000.html

இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும் விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிறது. புதுமை விரும்பிகளுக்கும் கணினி தட்டச்சு சற்று வித்தியாசமாகவும் விரைவாகவும் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Tuesday, August 16, 2011

'உப்பு அதிகமானால் ஆரோக்கியம் கெடும்'


உணவில் உப்பின் அளவை பதினைந்து சதவீதம் குறைத்தால் உலக அளவில் அடுத்த பத்து ஆண்டுகளில் எண்பது லட்சம் பேர் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மக்கள் தங்கள் ஆரோக்கியம் மேம்பட புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கு அடுத்தபடியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயம், அவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்துக்கொள்வதுதான் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
"மக்கள் தங்கள் ஆரோக்கியம் மேம்பட புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கு அடுத்தபடியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயம், அவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை குறைத்துக்கொள்வதுதான்."
பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள்
உலக சுகாதார நடவடிக்கைகள் முன்னுரிமை தரும் விஷயமாக உப்புக் குறைப்பை ஐ.நா. மன்றம் முன்னிறுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பின் அளவை கண்காணித்து ஒழுங்குசெய்வதற்கு செயல்திறன் மிக்க வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நாம் வாங்கும் உணவுப் பொருட்களில்ஏற்கனவே கலந்துள்ள உப்புதான் நம் உடம்பில் உப்பின் அளவு அதிகமாவதற்கு காரணமாக இருக்கிறது.
ஆகவே ஒருவர் தானாக முன்வந்து உப்பை குறைப்பது என்பது அவ்வளவாகப் பலன் அளிக்காது, தாம் உருவாக்கும் உணவுப் பொருட்களில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லி உற்பத்தி நிறுவனங்களை வற்புறுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
பிரிட்டனில் உள்ள வாரிக் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகம் இணைந்து இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
உப்பு அதிகம் சாப்பிட சாப்பிட, அதிக உப்பு இருந்தால்தான் உணவு சுவையாக இருப்பதாக நாம் உணர ஆரம்பித்துவிடுவோம். அது நாம் உட்கொள்ளும் உப்பின் அளவு அதிகரித்துக்கொண்டேபோக வழிவகுத்துவிடும் என இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்ஸிஸ்கோ கப்பூசியோ கூறுகிறார்.
உடலில் கலக்கும் உப்பின் அளவுக்கும், இரத்தக் கொதிப்பின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
இருதய நோய், வாதம், சிறுநீரகப் பாதிப்பு போன்றவற்றின் காரணியாக இரத்தக் கொதிப்பு அமைந்துள்ளது.

மோட்டொரோலாவை வாங்குகிறது கூகுள்


அமெரிக்க கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டொரோலா மொபிலிட்டியை வாங்கப்போவதாக இணையத்துறை பிரபல நிறுவனமான கூகுள் அறிவித்துள்ளது.
மென்பொருள் நிறுவனமாக இருந்துவரும் கூகுள் இந்த முடிவின் மூலம் கருவிகளின் உற்பத்தித்துறைக்குள் பெரிய அளவில் நுழைந்துள்ளது எனலாம்.
பன்னிரண்டரை பில்லியன் டாலர்கள் ரொக்கப் பணமாக கொடுத்து இந்த நிறுவனத்தை கூகுள் வாங்குகிறது.
கூகுளின் அண்ட்ரோய்ட் ஒப்பரேட்டிங் சிஸ்டத்தை அதாவது கைத்தொலைபேசிகள் இயக்க மென்பொருளை மோட்டொரோலா கைத்தொலைபேசிகள் பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், கடந்த சில வருடங்களாக ஆப்பிள், சம்சங், எச்.டி.சி. ஆகிய போட்டி நிறுவனங்களின் ஆதிக்கத்தை அடுத்து மோட்டரோலா கைத்தொலைபேசிகள் விற்பனை குறைந்துள்ளது.

பேஸ்புக்கால் பரீட்சையில் தோற்கும் பாடசாலை மாணவர்கள்


நாளாந்தம் பேஸ்புக் கணக்குகளை அல்லது வேறு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பிள்ளைகள் பள்ளிகளில் குறைவான புள்ளிகளைப் பெறுகின்றனரென அமெரிக்க ஆய்வொன்று கூறுகின்றது.

அத்தளத்துடன் அதிக நேரத்தைக் கழிப்பதனால் இவர்களது பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படுவதுடன் மோசமான குணத்தினையும் பெறுகின்றனர் என கூறப்படுகின்றது.

இதனால் வளர வளர இவ்வாறான சமூக வலையமைப்புக்களால் எதிர்மறைத் தாக்கங்களுடனேயே இவர்கள் வளர்கின்றனரென இவ்வாய்வு கூறுகின்றது.

தமது பேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பதற்காக அவசரமாகப் படிப்பதால் முக்கியமாகப் படிக்க வேண்டிய பாடங்களை 15 நிமிடங்களே பார்க்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 3 நிமிடங்களும் இவர்கள் தமது செயற்பாட்டிலிருந்து விலகுகின்றார்கள். 15 நிமிடத்திற்கொரு தடவை பேஸ்புக் இனைப் பார்த்தாலே அவர்கள் மோசமான மாணவர்களாகி விடுவார்கள்.

இளையோர்களுக்கிடையே சமூக ஈர்ப்பொன்றை பேஸ்புக் ஏற்படுத்தியிருப்பதை மறுக்கமுடியாது.

இதனால் நாங்கள் தற்போது இதன் நன்மை தீமைகள் பற்றி ஆராயவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்கின்றனர் மனோதத்துவவியலாளர்கள்.

13 வயதிற்குட்பட்ட பிள்ளைகளும் ஆவலினால் இதற்கு அடிமையாகிப் போயுள்ளனர் என்றும் இதனால் இவர்களுக்கு மன அழுத்தம், வேறு மனரீதியான குழப்பங்கள், நித்திரையின்மை மற்றும் வயிற்றுக்குத்து என்பன ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.

எனினும் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தாழ்வு மனப்பான்மையுள்ள பிள்ளைகளையும் சமூகத்தில் இணைக்கப் பயன்படுகின்றது என்பதையும் மறுக்கமுடியாது.

இதனால் பெற்றோர்கள்தான் தமது பிள்ளைகளின் இணைய செயற்பாடுகளைத் தொடர்ந்து பரிசோதித்தபடி இருக்கவேண்டும்.

Saturday, August 13, 2011

Smartphones களின் வரவால் GPS விற்பனையில் வீழ்ச்சி


அண்மைக்காலங்களில் போக்குவரவு மற்றும் வரைபட அமைப்புக்கள் கார்களிலும் கைத்தொலைபேசிகளிலும் சாதாரணமாகக் காணப்படுவதால் தனிநபர் வழிகாட்டல் கருவியான GPS இன் பயன்பாட்டில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

இது காமின் மற்றும் ரொம்ரொம் NV நிறுவனங்களை வேறு புதிய திட்டங்களை உருவாக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது.

வட அமெரிக்கச் சந்தைகளில் 25 வீதமும் ஐரோப்பியச் சந்தைகளில் 10 வீதமும் வீழ்ச்சியேற்படுமென காமின் எதிர்பார்க்கும் அதேவேளை ரொம்ரொம் நிறுவனம் உலகளாவில் 15-20 வீத வீழ்ச்சியையும் வட அமெரிக்காவில் ஆகக்கூடிய சரிவையும் எதிர்பார்க்கின்றது.

41.5 மில்லியன் தொகுதிகள் 2010 இல் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது 39.2 மில்லியன் நட்டத்தைக் கொண்டுவருமென HIS iSuppli சந்தைப்படுத்தல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Berg Insight எனும் ஆய்வு நிறுவனத்தின் முடிவானது இச்செயற்பாடு 2015ம் ஆண்டளவில் 5 வீதத்தால் 34 மில்லியனிற்குக் குறையும் என்கின்றது.

ஸ்மாட்ஃபோன் உற்பத்தியாளர்களான Nokia மற்றும் கூகிள் நிறுவனத்தினரால் இலவசமான வழிகாட்டல் கிடைப்பதால் அவை GPS களின் பயன்பாட்டை அருகச் செய்துள்ளன.

இவ்வருடம் மட்டும் 135 மில்லியன் வழிகாட்டல் வசதி கொண்ட கைத்தொலைபேசிகள் விற்கப்படுமென HIS எதிர்பார்க்கின்றது. இது 2013 இல் 269 மில்லியனாக இரு மடங்காகும் என்றும் கூறுகின்றது.

இதனால் காமினும் ரொம்ரொம்மும் தமது வீழ்ச்சியைச் சரிப்படுத்தும் நோக்கில் வேறுவிதமாகத் தமது முன்னேற்றத்தைக் கொண்டுசெல்லத் தீர்மானிக்கின்றன.

இவையும் வாகன மற்றும் கைத்தொலைபேசி விற்பனையில் தமது பதிப்பை மேம்படுத்தவுள்ளன.

காமின் நிறுவனத்தின் GPS பயன்படுத்தப்படும் வேறு சூழ்நிலைகளைப் பார்க்கையில், விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான GPS உணரிகளுடனான மணிக்கூடுகளைத் தயாரிப்பதில் தனது நிலையான இடத்தைத் தக்கவைத்துள்ளது.

மேலும் இது கடற்பயணங்களிற்குத் தேவையான வரைபடங்கள், மீன்களைக் கண்டுபிடித்தல் போன்ற செயற்பாடுகளிலும் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

எனினும் 2012/13 களில் இந்த நிலை தலைகீழாக மாறலாமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வார்த்தை மேகக்கணணி அதாவது Cloud Computing.
கணணியில் உள்ள வன்தட்டில் நம் தகவல்களை சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம்.

இதை தவிர்ப்பதற்காகவும் உலகில் எங்கிருந்தும் எந்த டிவைஸ் மூலம் நம் தகவல்களை பதிவேற்றவும், பதிவேற்றியதை தரவிறக்கவும் 100 GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு முன்னனி தளம்.

நம் வீட்டு கணணி அல்லது அலுவலகக் கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது.

ஓன்லைன் மூலம் இணையதள சேவை கொடுக்கும் நிறுவனங்கள் தற்போது Cloud Hosting என்று சொல்லக்கூடிய மேகக்கணணி முறையில் தங்கள் சேவையை விரிவுபடுத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

இதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன் ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். எந்த ஓப்ரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும் பரவாயில்லை, விண்டோஸ், மேக், அண்ட்ராய்டு, IOS, மற்றும் பிளாக்பெர்ரி போன்ற அனைத்து இணையவசதி உள்ள மொபைல் மூலமும் நாம் தகவல்களை பாதுகாப்பாக ஓன்லைன் மூலம் சேமிக்கலாம்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ளவர்கள் எளிதாக தரவிறக்கலாம். ஒரு நாட்டில் இணையதளப்பிரச்சினை என்றாலும் அடுத்த நாட்டில் உள்ளவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லாமல் தெரியும்.

இப்படி சேவை கொடுக்க அதிகமாக கட்டணம் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு முன்னனி நிறுவனம் Cloud Storage 10GB சேமிக்க இலவச இடம் கொடுக்கிறது.

இத்தளத்திற்கு சென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நீங்களும் உங்கள் முக்கியமான தகவல்களை கிளவுட் சேமிப்பு முறையில் பாதுகாப்பாக வைக்கலாம்.

கணணியே முழுவதும் பாதிக்கப்பட்டாலும் அடுத்த கணணி மூலம் இணையம் வழியாக நம் கோப்புகளை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி

தூக்கமின்மையா? கவலையை விடுங்கள்


நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே ‘கொர்’ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக நித்திரை கொள்ள தொடங்கிவிடுவார்கள்.

அவர்களை பற்றி பிரச்சனை இல்லை. தற்போதைய பிரச்சனை நித்திரை வராதவர்களை பற்றியது.

புத்தகம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித்தும், சிலருக்கு நித்திரை தொலைவிலேயே இருக்கும், பக்கத்தில் நெருங்காது.

அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுணர்கள் தரும் தூக்கம் வரவழைக்கும் உணவுகள் பட்டியல் இதோ:

இறால்:

மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு. இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையவை.

பீன்ஸ்:

பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட ‘பி’ வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன.

இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது. மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு ‘பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தயிர்:

கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.

ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்கும். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பசளிக்கீரை:

கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

Thursday, August 4, 2011

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.
இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37)
”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.
4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.
7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.
ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

நடுத்தர வயது மாற்றத்திற்கு இதயத்துடன் மூளையும் பாதிப்படைகிறது


புகைத்தல், நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்றவையும் பத்து வருடங்களின் பின்னர் மூளையின் சக்தியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என கணடறியப்பட்டுள்ளது.

அதிகளவு நினைவாற்றல் கொண்ட நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது இந்தத் தகவலையும் வைத்தியர்கள் மனதிற்கொண்டு அவர்களது வாழ்க்கைமுறையை முன்னேற்றத் தூண்டவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

50 வயதுள்ளவர்கள் மனரீதியான பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது மிகவும் குறைவான நினைவாற்றலுடனேயே இருந்தார்கள்.

50 வயது மற்றும் 60 வயதைச் சேர்ந்த 1300 ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கி அவர்களது நிறையையும் உயரத்தையும் அளந்து, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவுப் பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கியது அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று.

அடுத்த 10 வருடங்களுக்கான மூளை அளவினை அளப்பதற்கான ஸ்கான்களும் மனநிலைப் பரிசோதனைகளும் இவர்களில் மேற்கொள்ளப்பட்டன.

வயது அதிகரிக்க திடமானவர்களது மூளைகூடச் சுருங்குகின்றது என அந்த ஆய்வின் முடிவு கூறியது.

ஆனால் நீரிழிவுடனான நபர்களில் குறைந்த நினைவாற்றல், மூளையின் நினைவுத்தட்டுச் சுருங்குதல் என்பன சாதாரணமானவர்களை விட அதிகமாக ஏற்படுகின்றது என்பதைக் கண்டனர்.

குறைந்த நினைவாற்றலானது புகைபிடிப்பவர்களில் அதிகமாக உள்ளது. அத்துடன் உயர்குருதியழுத்தத்துடன் உள்ளவர்களில் மூளையில் சிறிய வெடிப்புக்கள் அல்லது சேதங்கள் காணப்படுகின்றன.

காலம் முடிந்துவிடும் முன்னர் தமது வாழ்க்கை முறையை மாற்றிவிடக்கூடியதாக இக்கண்டுபிடிப்புக்கள் உள்ளனவென சாள்ஸ் டீகார்லி என்ற விஞ்ஞானி கூறுகின்றார்.

இதற்கு முன்னர், அமெரிக்க ஓய்வூதியம் பெறும் வயோதிபர்களிடையே நடாத்தப்பட்ட ஓர் ஆய்வில், உடற்பருமனானது 16 வருடங்களை மூளையில் அதிகரிக்கச் செய்கின்றதெனக் கண்டறிந்தனர். உயரளவில் கொழுப்பு அதிகரிப்பதும் நாடிகளை உறையச் செய்வதுடன் இரத்தத்தினையும் ஒட்சிசனையும் பாயவிடாமற் செய்துவிடும்.

உடற்பயிற்சிகளைச் செய்து, சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு, புகைக்காமல் வாழ்க்கை முறையை மாற்றுவது அரைவாசிப் பேரது ஆயுளையும் நீட்டிக்குமெனக் கூறப்படுகின்றது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் நிறை கூடியவர்கள் 75 வயதில் உள்ளவர்களைவிட இரு மடங்கு நினைவாற்றல் குறைவானவர்களாக இருப்பார்கள்.